Gender | Product | Page Name | Page URL |
---|---|---|---|
Man | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | என்டோமன்ட் | http://www.ceylincolife.com/ta/endowment/ |
Women | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | என்டோமன்ட் | http://www.ceylincolife.com/ta/endowment/ |
Man | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | அட்வான்ஸ் பேமென்ட் திட்டம் | http://www.ceylincolife.com/ta/advanced-payment/ |
Women | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | அட்வான்ஸ் பேமென்ட் திட்டம் | http://www.ceylincolife.com/ta/advanced-payment/ |
Man | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | சுப்ரீம் | http://www.ceylincolife.com/ta/supreme |
Women | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | சுப்ரீம் | http://www.ceylincolife.com/ta/supreme |
Man | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | Ceylife ஆன்லைன் | http://www.ceylincolife.com/ta/ceylife-online |
Women | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | Ceylife ஆன்லைன் | http://www.ceylincolife.com/ta/ceylife-online |
Man | எனது நீண்டகால நிதியியல் இலக்குகளை அடைய | ஓய்வூதிய சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/pension-saver |
Women | எனது நீண்டகால நிதியியல் இலக்குகளை அடைய | ஓய்வூதிய சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/pension-saver |
Man | எனது நீண்டகால நிதியியல் இலக்குகளை அடைய | எதிர்கால சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/future-saver |
Women | எனது நீண்டகால நிதியியல் இலக்குகளை அடைய | எதிர்கால சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/future-saver |
Man | எனது ஓய்வுகாலத்தை திட்டமிட | காப்புறுதித் திட்டங்கள் இங்கே, | http://www.ceylincolife.com/ta/retirement |
Women | எனது ஓய்வுகாலத்தை திட்டமிட | காப்புறுதித் திட்டங்கள் இங்கே, | http://www.ceylincolife.com/ta/retirement |
Man | எனது ஓய்வுகாலத்தை திட்டமிட | ஓய்வூதிய சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/pension-saver |
Women | எனது ஓய்வுகாலத்தை திட்டமிட | ஓய்வூதிய சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/pension-saver |
Man | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | பாரதூரமான நோய் அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/critical-illness-benefit/ |
Women | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | பாரதூரமான நோய் அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/critical-illness-benefit/ |
Man | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | பாரிய சத்திரசிகிகச்சை அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/major-surgery-benefit/ |
Women | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | பாரிய சத்திரசிகிகச்சை அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/major-surgery-benefit/ |
Man | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | வைத்திய கொடுப்பனவு அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/hospital-cash-benefit/ |
Women | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | வைத்திய கொடுப்பனவு அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/hospital-cash-benefit/ |
Man | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | மருத்துவ உதவிக்கு மேலதிக அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/health-support-plus-benefit/ |
Women | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | மருத்துவ உதவிக்கு மேலதிக அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/health-support-plus-benefit/ |
Man | குறுங்கால நிதியியல் வருவாயை ஈட்டுதல் | எதிர்கால சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/future-saver |
Women | குறுங்கால நிதியியல் வருவாயை ஈட்டுதல் | எதிர்கால சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/future-saver |
Man | குறுங்கால நிதியியல் வருவாயை ஈட்டுதல் | முதலீட்டு திட்டங்கள் | http://www.ceylincolife.com/ta/investment-plans/ |
Women | குறுங்கால நிதியியல் வருவாயை ஈட்டுதல் | முதலீட்டு திட்டங்கள் | http://www.ceylincolife.com/ta/investment-plans/ |
Man | எனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல் | டிகிரி சேவர் | http://www.ceylincolife.com/ta/degree-saver/ |
Women | எனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல் | டிகிரி சேவர் | http://www.ceylincolife.com/ta/degree-saver/ |
Man | எனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல் | சிப்செத | http://www.ceylincolife.com/ta/sipsetha |
Women | எனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல் | சிப்செத | http://www.ceylincolife.com/ta/sipsetha |
Man | எனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல் | ரன் தரு | http://www.ceylincolife.com/ta/ran-daru/ |
Women | எனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல் | ரன் தரு | http://www.ceylincolife.com/ta/ran-daru/ |
Man | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | ஸ்மார்ட் சேவர் | https://www.ceylincolife.com/ta/smart-saver/ |
Women | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | ஸ்மார்ட் சேவர் | https://www.ceylincolife.com/ta/smart-saver/ |
ஆயுள் காப்புறுதி
உங்கள் இலக்குகளுக்கு ஏற்ற காப்புறுதித் திட்டங்களை தெரிவு செய்யுங்கள்
உங்கள் இலக்குகளை அடைந்துகொள்வதில் ஆயுள் காப்புறுதி உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
வாழ்க்கையில் நாம் அடைந்துகொள்ள வேண்டிய இலக்குகளும் இலட்சியங்களும் எம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன. இருப்பினும், நாம் அவற்றை அடைந்துகொள்வதற்கான பாதையில் தடைகளையும் ஸ்திரமற்ற தன்மையையும் சந்திக்கிறோம். எமது ஆயுள் காப்புறுதித் தீர்வுகள், நீங்கள் எதிர்பாராத இடர்களை எதிர்கொள்ளும் போது, உங்களைப் பாதுகாக்கும் அதேவேளை, நீங்கள் நம்பிக்கையுடன் இலக்குகளை அடைந்துகொள்ளவும் உதவுகிறது.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்குமான சிறந்த ஆயுள் காப்புறுதித் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் கிடைக்கும் மன அமைதியை அனுபவித்திடுங்கள்.
நீங்கள் பொக்கிஷமாகக் கருதுவது உங்கள் குடும்பத்தைத் தான். எனவே, குடும்பத்தினரின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகள் நிறைவேற்றப்படுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஆயுள் காப்புறுதி என்பது நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய இன்னுமோர் முதலீடல்ல. மாறாக, இது உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் உங்களுக்காகவும் நீங்கள் வைத்திருக்க வேண்டிய ஒரு பலமான நிதிக்காப்பு மற்றும் ஆதரவு திட்டமாகும். பாதுகாப்பு மற்றும் செல்வத்தை உருவாக்கும் வாய்ப்புகள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் தமது கனவுகளை நம்பிக்கையுடன் பின்தொடர அனுமதிக்கின்றன.
உங்கள் தேவைகள் குறுகிய அல்லது நீண்ட கால தேவைகள் என எதுவாக இருப்பினும், ஆயுள் காப்புறுதித் திட்டச் சந்தையில் முன்னணி வகிக்கும் செலிங்கோ லைஃப், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு மிகவும் தேவைப்படும் போது, அவர்களுக்கு மிகப்பெரிய நிதிப் பாதுகாப்பை வழங்கும் என்பதை நாம் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.
பாதுகாப்புத் திட்டங்கள்
உங்கள் குடும்பத்தையும் உங்கள் இலக்குகளையும் பாதுகாப்பு, வாழ்க்கைக்கு பலமான அடித்தளத்தை உருவாக்கிறது. உங்கள் அன்புக்குரியவர்கள் பாதுகாக்கப்படுவதை நீங்கள் உறுதிசெய்தவுடன், உங்களின் இலக்குகளையும் அபிலாஷைகளையும் நோக்கி நீங்கள் முன்னேறுவதற்கான ஒரு படிநிலையாக இந்த உத்தரவாதம் செயல்படுகிறது.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் மன அமைதியை உறுதிப்படுத்துவதற்காக செலிங்கோ லைஃப் பல திட்டங்களையும் கொண்டுள்ளது.
சேமிப்புத் திட்டங்கள்
நீங்கள் முதலீடு செய்யும் எந்தவொரு தயாரிப்பிலும், குறிப்பாக உங்கள் இலக்குகளை அடைந்துகொள்வதில் நீங்கள் கவனம் செலுத்தும்போது, சிறந்ததோர் நிதி வலுவூட்டல் தேவைப்படுகிறது. ஒருவர் தனது வாழ்க்கைக் கனவுகளை அடைவதற்கான பாதையில் வலுவான நிதி ஆதரவு ஒரு முக்கிய திறவுகோலாகும் என்பதை செலிங்கோ லைஃப் ஆகிய நாம் ஒருபோதும் மறந்துவிட மாட்டோம்.
இந்த வருமானம் சார்ந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் உங்களுக்கு சிறந்த மதிப்பை திரும்பவும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டவை ஆகும்
கல்வித் திட்டங்கள்
இன்றைய உலகில் உங்கள் குழந்தைகள், அவர்கள் விரும்பும் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் திறந்துள்ளன. எந்தவொரு எதிர்பாராத நிலைமையிலும் உங்கள் பிள்ளை கல்வியை தொடர்வதை, பெற்றோரான நீங்கள் உறுதிசெய்வது கடமையாகும்.
இந்த காப்புறுதித் திட்டங்கள் பாதுகாப்பை வழங்குவதோடு, உங்கள் குழந்தையின் கல்வியின் அனைத்து நிலைகளுக்கும் பிரகாசமான பாதையையும் உருவாக்கின்றன.
ஆயுள் காப்புறுதியைப் புரிந்துகொள்ளல்
ஆயுள் காப்புறுதி
இது ஒரு தனிநபருக்கும் ஒரு காப்புறுதி நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தம் ஆகும். இதன் மூலம் தனிநபரது பட்டியலிடப்பட்ட பயனாளிகளுக்கு காப்புறுதி உரிமையாளரின் மரணத்தின் போது, பணம் செலுத்துவதற்கு காப்புறுதி நிறுவனம் உறுதியளிக்கின்றது.
தவணைத் தொகை
காப்புறுதி வழங்குனர் தனிநபரிடமிருந்து காப்பீட்டுடன் தொடர்புடைய இடர்களை நிர்வகிப்பதற்காக அறவிடும் கட்டணம் ஆகும்.
மரண அனுகூலம்
காப்புறுதி செய்யப்பட்ட தனிநபர் மரணிக்கும் போது பயனாளிக்கு வழங்கப்படும் தொகை
கோரிக்கைகள்
பயனாளி மரண அனுகூலம் ஒன்றைக் கோரி காப்புறுதி நிறுவனத்திடம் மரணச் சான்றிதழைச் சமர்ப்பித்து விண்ணப்பம் செய்கின்றார். பல நிறுவனங்கள் காப்புறுதியாளருக்கு காப்பீட்டு கோரிக்கையை ஆய்வு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்கும். அதன் பின்னர் அவர்களால் செலுத்தவோ, மறுக்கவோ, அல்லது மேலதிக விபரம் கோரவோ முடியும்.
முதிர்வு திகதி
காப்புறுதி உரிமையாளரின் மரணம் அல்லது காப்புறுதி காலாவதியாகும் காலம், ஆயுள் காப்புறுதி முதிர்வை எட்டியதாக கருதப்படும்
பயனாளர்
காப்புறுதி ஒன்றின் அனுகூலங்களை பெற்றுக்கொள்ளத் தகுதி பெற்ற தனிநபரே பயனாளர் ஆவார். காப்புறுதி ஒப்பந்தத்தினை கையொப்பமிடும் போது, காப்புறுதி உரிமையாளர் அவரின் பயனாளர்களைப் பெயரிடுகின்றார்.
மேலதிக தெரிவு அனுகூலங்கள்
அடிப்படை ஆயுள் காப்புறுதியுடன் மேலதிகமாக இணைக்கக்கூடிய, காப்புறுதிதாரருக்கு மேலதிக அனுகூலங்களை, மேலதிக கட்டணத்தோடு வழங்கும் அனுகூல திட்டங்கள்.
இடர்கள்
காப்புறுதி உரிமையாளருக்கு ஏற்படக்கூடிய இடர்களை காப்புறுதி வழங்குனர்கள் எதிர்வுகூறுவார்கள். வயது மற்றும் மருத்துவ வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு ஏற்படக்கூடிய இடர்கள் வழக்கமாக வழங்குனர்களால் அனுமானிக்கப்படும். உயர் இடர்கள் உள்ள சந்தர்பங்களில் அதிக செலவு கொண்ட காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டி நேரிடலாம்.
என்டோமன்ட்
காப்புறுதி காலத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டால், காப்பீடு செய்யப்பட்ட தனிநபர் அத்தகைய ஒரு காலப் பகுதியில் உயிருடன் இருக்கும்போது அனுகூலங்களை வழங்கும் ஒரு வகை காப்புறுதியாகும்.