பிரணாம புலமைப் பரிசில்

ஒவ்வொரு பெற்றோரினதும் கனவு அவர்களது பிள்ளைகள் மிகச்சிறந்த திறமையாளர்களாக உருவாகுவதே ஆகும். தமது பிள்ளைகள் முன்னேற்றத்தில் பிரகாசிப்பதை பார்ப்பது எந்தவொரு பெற்றோரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய இன்பமாகும்.

 

செலிங்கோ லைஃப் ஆகிய நாங்கள் அந்தக் கனவுகளை நினைவாக்க எப்போதும் தயாராக
இருக்கிறோம். பிரணாம கல்வி புலமைப்பரிசில்கள் மூலம் எங்கள் காப்புறுதிதாரர்களின்
பிள்ளைகள் கல்வி மற்றும் வாழ்கையில் சிறந்து விளங்க நாங்கள் துணையிருப்போம். 

 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் அல்லது விளையாட்டு, நாடகம், கலைகள் மற்றும்


கண்டுபிடிப்புகளில் தேசிய / சர்வதேச மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை அடையும்
அனைவருக்கும் பிரணாம புலமைப்பரிசில் ஊடாக நிதி உதவி வழங்கப்படுகின்றது.

 

தொடர்ச்சியாக 22 வருடங்களுக்கும் மேலாக பிரணாம புலமைப்பரிசில் வாய்ப்புகள் மூலம் நாளைய
தலைவர்களுக்கு எமது வாழ்த்துக்களை பெருமையுடன் தெரிவித்து வருகின்றோம்.

பிரிவுகள்

05 ஆண்டு புலமைப்பரிசில் (ஒவ்வொரு ஆண்டும் ரூ. 240,000 பெறுமதியான 25 புலமைப்பரிசில்கள்)

யார் விண்ணப்பிக்கலாம்: குறித்த மாவட்டத்தில் சகல செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்கள் மத்தியில் அவர்களின் பிள்ளை 05ம் ஆண்டு புலமைப்பரிசிலில் சிறந்த சாதனையை பெற்றால் இதற்கு விண்ணப்பிக்க தகுதிபெறுவார்கள்.

அனுகூலம்: 05 ஆண்டுகளுக்கு மாதாந்தம் ரூ. 4000

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (ஒவ்வொரு ஆண்டும் ரூ. 168,000 பெறுமதியான 25 புலமைப்பரிசில்கள்)

யார் விண்ணப்பிக்கலாம்: குறித்த மாவட்டத்தில் சகல செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்கள் மத்தியில் அவர்களின் பிள்ளை க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த சாதனையை பெற்றால் இதற்கு விண்ணப்பிக்க தகுதிபெறுவார்கள்.
பரீட்சை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்ட ஆறு முக்கிய பாடங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும்

அனுகூலம்: 02 ஆண்டுகளுக்கு மாதாந்தம் ரூ. 7000.00

க.பொ.த (உ/த) (ஒவ்வொன்றும் 25 புலமைப்பரிசில்கள் 288,000 LKR & 75 புலமைப்பரிசில்கள் ஒவ்வொன்றும் LKR 60,000)

யார் விண்ணப்பிக்கலாம்: குறித்த மாவட்டத்தில் சகல செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்கள் மத்தியில் அவர்களின் பிள்ளை க.பொ.த உயர் தரத்தில் Z Score அடிப்படையில் இதற்கு விண்ணப்பிக்க தகுதிபெறுவார்கள்.

அனுகூலம்:

03 ஆண்டுகளுக்கு மாதாந்தம் ரூ. 8000.00

Z (இஸட்) புள்ளிகளின் அடிப்படையில் மாவட்டத்தில் 2ம், 3ம், 4ம் இடங்களை பெற்றவர்களுக்கு ரூ. 60,000 வழங்கப்படும்.

தேசிய சிறப்புத் தேர்ச்சி (Merit) விருது (ஒவ்வொரு ஆண்டும் ரூ. 50,000 பெறுமதியான 10 புலமைப்பரிசில்கள்)

யார் விண்ணப்பிக்கலாம்:

• தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் பாடத்திட்டம் சாராத விடயங்களான விளையாட்டு, கலை கலாச்சார நிகழ்வுகளில் அல்லது புதிய கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் பெற்ற பிள்ளைகள்
• தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதி பெற்ற பிள்ளைகள் அல்லது ஒலிம்பிக் விளையாட்டு வகைப்படுத்தலின் கீழ் தேசிய மட்ட விருதுகள் பெற்றவர்கள்

கடந்த பிரணாம நினைவுகள்