ஒய்வூதிய திட்டங்கள்
ஓய்வூதிய திட்டமிடல் சிக்கலானதாக இருக்கக் கூடாது. அது காலத்தை வீணடிப்பதாகவும்,நிச்சயமாக தற்போதைய நிதி நிலைக்கு தடையானதாகவும் இருக்கக்கூடாது.
நீங்கள் கனவு காண்பது போலவே செலிங்கோ லைஃப் மிகவும் நெகிழ்வான, விளங்கிக் கொள்ள மிகவும் இலகுவான ஓய்வூதிய திட்டமொன்றை கொண்டுள்ளது.
எவ்வாறு செயற்படுகின்றது
செலிங்கோ லைஃப் ஓய்வூதியத் திட்டங்கள் குறிப்பிடத்தக்க தொகையை கொண்ட நிதியத்தை உங்கள் ஓய்வூதியத்தின் போது உருவாக்க உதவும். குறித்த தொகைக்கு மாதாந்தம் அறிவிக்கப்பட்ட விகிதத்திற்கு ஏற்ப உங்கள் சொந்த கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வரும்.
அது தொடக்கம் உங்கள் நிதியம் மெதுவாகவும், பலமாகவும் வளர்ச்சி கண்டு இறுதியில் பாரிய ஒரு தொகையை உங்களுக்கு வழங்குவதால் நீங்கள் மகிழ்ச்சியான ஓய்வூதியத்தை பெறலாம்.
அனுகூலங்கள்
உங்கள் கணக்கு மிகுதி தொடர்ந்தும் வளர்வதுடன், இறுதியில் ஒன்று திரட்டிய ஓய்வூதிய நிதியை பெறுவீர்கள். பணத்தை ஒரே தடவையில் பெற்றுக் கொள்ளும் அல்லது மாதாந்த ஒய்வூதியமாக பெற்றுக் கொள்ளும் தெரிவை பெறுவீர்கள்.
மேலும் ஆயுள் காப்புறுதி மூலம் நீங்கள் பாதுகாப்பு பெறுவதுடன், இது ஒய்வூதிய திட்டத்திலேயே இணைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் மேலும் மன அமைதி அடையலாம்.
உதாரணம்: மாதாந்தம் ரூ. 5000 கட்டுப்பணத்திற்கு 60 வயதில் முதிர்வின் போது கிடைக்கும் தொகை
தற்போதைய வயது | 7% | 9% |
முதிர்வில் செலுத்தப்படும் தொகை (ரூ) | ||
23 | 8,337,978 | 13,432,364 |
25 | 7,259,676 | 11,333,198 |
27 | 6,306,472 | 9,545,038 |
29 | 5,463,854 | 8,021,806 |
ஒரே தடவையில் செலுத்திய ரூ. 2,000,000 கட்டுப்பணத்திற்கு 60 வயதில் முதிர்வின் போது கிடைக்கும் தொகை
தற்போதைய வயது | 7% | 9% |
முதிர்வில் செலுத்தப்படும் தொகை (ரூ) | ||
30 | 12,102,000 | 21,094,000 |
35 | 8,892,000 | 14,126,000 |
37 | 7,860,000 | 12,034,000 |
39 | 6,948,000 | 10,252,000 |
யாரால் விண்ணப்பிக்க முடியும்
18-65 வயதிற்கு இடைப்பட்ட எந்தவொரு நபரும் இந்த திட்டத்தினை குறைந்தது 5 ஆண்டு காலத்திற்கு பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுகின்றனர்.
கட்டணம் செலுத்தும் முறை
இந்தக் காப்புறுதித் திட்டத்திற்கான கட்டுப்பணத்தினை மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் செலுத்த முடியும்.
மேலும், இத்திட்டத்தில் ஒரே தடவையில் முதலீடு செய்யும் தெரிவும் உங்களுக்கு உள்ளது. இதனால் நீங்கள் தவணை முறையில் கட்டுப்பணம் செலுத்தத் தேவையில்லை.
அத்துடன் ஓய்வூதிய தொகை அதிகரிப்பதற்காக, உங்கள் முதலீட்டை நீங்கள் அதிகரிக்க விரும்பினால், மீள் நிரப்பு செய்யும் தெரிவும் உங்களுக்கு உள்ளது.
மேலதிக அனுகூலங்கள்
செலிங்கோ லைஃப் ஓய்வூதிய திட்டம் காப்புறுதி உரிமையாளர்கள் தமது விசுவாசத்செலிங்கோ ஓய்வூதிய திட்ட உரிமையாளர்கள் தமது விசுவாசத்திற்காக மேலதிக வெகுமதிகளைப் பெறத் தகுதி பெறுவார்கள். சகல காப்புறுதி உரிமையாளர்களும் செலிங்கோ ஃபெமிலி சவாரி வாடிக்கையாளர் ஊக்குவிப்பில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள். திற்காக மேலதிக வெகுமதிகளை பெற தகுதி பெறுவார்கள். சகல காப்புறுதி உரிமையாளர்களும் செலிங்கோ ஃபெமிலி சவாரி வாடிக்கையாளர் ஊக்குவிப்பில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பை பெறுவார்கள்.