முதலீட்டாளர் தொடர்பு
செலிங்கோ லைஃப் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் நிதியைக் கொண்டுள்ளது. எமது ஆயுள் நிதியத்தின் பெறுமதி 2023ஆம் ஆண்டில் 157 பில்லியன் ரூபாவை விடவும் அதிகமாகும். அதே ஆண்டில் வாடிக்கையாளர் அனுகூலமாக 23 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டது.
ஆயுள் காப்புறுதி சந்தையில் 20 ஆண்டுகளாக முன்னணியில் உள்ள நாம், நிதி ரீதியாக மிகவும் வலுவான மற்றும் நிலையான நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் இந்த ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இதனால் அவர்கள் தமது இலக்குகளை அடையலாம்.
செலிங்கோ லைஃப் 2023 ஆண்டறிக்கை “நம்பிக்கையின் மையக்கரு” அதனை பதிவிறக்கம் செய்யவோ அல்லது பார்வையிடவோ முடியும்.
நிதி நிலைத்தன்மை
2023 டிசம்பர் 31 நிலவரப்படி எங்கள் ஆயுள் நிதி 157 பில்லியன் ரூபாவை விடவும் அதிகமாகும். இதுவே தற்போது காப்புறுதி துறையில் மிகவும் வேகமாக உயரும் ஆயுள் நிதியமாக உள்ளது. அதே ஆண்டில் வாடிக்கையாளர் அனுகூலமாக 23 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டது.
எமது ஆயுள் நிதியத்தின் அக்சூரியல் மதிப்பாய்வு (Actuarial valuation) சுயாதீன ஆலோசனை முகவரான வில்ஸ் டவர்ஸ் வொட்சனால் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் விவரங்களுக்கு எங்களின் 2023ஆம் ஆண்டறிக்கையை கீழே பார்க்கலாம்.
செலிங்கோ லைஃப் லைஃப் நிதி தொடர்பான முதலீடுகள்
ஆயுள் நிதி தொடர்பான முதலீட்டு முயற்சிகள் காப்புறுதித்துறை 2000 ஆம் ஆண்டின் சட்ட 43ஆம் இலக்க சட்டத்தின் கீழான விதிமுறைகளுக்கு உட்பட்ட முதலீட்டு வழிகாட்டலுக்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்றன.
58% – அரசுப் பத்திரங்கள்
27% – கால வைப்பு
7% – கார்ப்பரேட் கடன்
8% – நிலம் மற்றும் சொத்து
1% – மற்றவை
மேலும் விவரங்களுக்கு எங்களின் 2023 ஆம் ஆண்டறிக்கையை கீழே பார்க்கலாம்.
வாடிக்கையாளர் நன்மைகள்
2023 ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களுக்கு 23 பில்லியன் ரூபா மதிப்புள்ள வாடிக்கையாளர் நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன.
2023 இல் செலுத்தப்பட்ட வாடிக்கையாளர் நன்மைகள்
இறப்பு மற்றும் பிற கோரல்கள் 1,197 மில்லியன் ரூபாஃ
ரொக்கம் மற்றும் லோயல்டி போனஸ் 4,500
முதிர்வு அனுகூலம் 16.6 மில்லியன் ரூபா.
மேலும் விவரங்களுக்கு எங்களின் 2023ஆம் ஆண்டறிக்கையை கீழே பார்க்கலாம்.
20 ஆண்டுகள் சந்தைத் தலைவராக இருப்பது நம்பிக்கை மற்றும் ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது
2004 ஆம் ஆண்டில் ஆயுள் காப்பீட்டில் சந்தைத் தலைவர் என்ற நிலையை நாங்கள் முதன்முதலில் பெற்றோம். இதன் பிரீமியம் வருமானம் 3,962 மில்லியன் ரூபாவாகும். பதிவு செய்யப்பட்ட பிரீமியம் வருமானத்துடன் 20வது ஆண்டாக நாங்கள் அந்த வேகத்தை தொடர்ந்துள்ளோம்.
மேலும் விவரங்களுக்கு எங்களின் 2023ஆம் ஆண்டறிக்கையை கீழே பார்க்கலாம்.