பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு

செலிங்கோ லைஃப் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வை (CSR) “பாதுகாப்பு மற்றும் படிப்படியான முன்னேற்றத்தை வழங்குவதோடு, தேவையுடையவர்களுக்கான சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் பயன்மிகுந்த தலையீடுகளை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் பின்தங்கிய பகுதிகளிலும் நிலைபேரான வணிகச் சூழலை உருவாக்குவதற்கு நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புகளை வழங்குதல்” என்று வரையறுக்கிறது.

 

எமது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முன்னெடுப்புகளை சுகாதாரம் மற்றும் கல்வி என இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை, ஐநா நிலைபேரான அபிவிருத்தி இலக்குகளின் 3 மற்றும் 4ஆம் இலக்குகளாகும்.

ஆரோக்கியம்

நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு செலிங்கோ லைஃபின் சுகாதார பரிசோதனை முகாமான “வைத்திய ஹமுவ அல்லது மருத்துவரைச் சந்தித்தல்” நடத்தப்பட்டது. மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும் உடல் பொருண்மைச் சுட்டெண், இரத்தச் சக்கரை, இரத்த அழுத்தம் மற்றும் கண் பரிசோதனை போன்ற சேவைகள் உட்பட மேலதிக சிகிச்சைகளுக்கான மருத்துவ பரிந்துரைகளைப் பெறவும் இவ்வாறான முகாம்கள் மக்களுக்கு உதவியாக அமைந்தன.

கல்வி

 

இலங்கையில் பெரும்பாலான சிறுவர்கள் அரச பாடசாலைகள் மூலம் வழங்கப்படும் இலவச கல்வியிலேயே தங்கியுள்ளனர். அதேநேரம், பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பல பாடசாலைகளும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் இயங்கி வருவதை செலிங்கோ லைஃப் கண்டறிந்து கொண்டது.