கல்வி

வகுப்பறைகளை நிர்மாணிக்கும் திட்டம்

இலங்கையில் பெரும்பாலான சிறுவர்கள் அரச பாடசாலைகள் மூலம் வழங்கப்படும் இலவச கல்வியிலேயே தங்கியுள்ளனர். அதேநேரம், பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பல பாடசாலைகளும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் இயங்கி வருவதை செலிங்கோ லைஃப் கண்டறிந்து கொண்டது. நாட்டில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளைக் கண்டறிந்து, வகுப்பறைகள் உட்பட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதையே, வகுப்பறைகளை நிர்மாணிக்கும் திட்டம் மேற்கொண்டு வருகிறது. எமது பரந்துபட்ட வலையமைப்பின் ஊடாக, நாம் அவ்வாறான பாடசாலைகளை இனங்கண்டு, எமது கிளை ஊழியர்கள், பெற்றோர் மற்றும் சமூக உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் வகுப்பறைகளை நிர்மாணிப்பதற்கு உதவியுள்ளோம். நிர்மாணத் திட்டத்தை செலிங்கோ லைஃப் மேற்பார்வை செய்து, ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும் நிதியுதவிகளை மேற்கொள்கிறது.

இதுவரையிலும் நாம், 80க்கு அதிகமான வகுப்பறைகளை நிர்மாணித்துள்ளதோடு, பராமரிப்பு விடயங்களிலும் பாடசாலைகளுக்கு ஆதரவு வழங்கி வருகின்றோம். உங்கள் பாடசாலையிலோ அல்லது கிராமத்திலோ வகுப்பறைகளை நிர்மாணிக்கும் விடயத்தில் எமது ஆதரவைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், நீங்கள் என்ற care@ceylife.lk மின்னஞ்சலின் ஊடாக எம்மைத் தொடர்புகொள்ள முடியும்.   

Kegalle Classroom
Elpitiya Classroom
Ceylinco Life best life insurance company education csr