டிகிரி சேவர்

கல்வித் திட்டம்

உங்கள் குழந்தை தனது இலட்சியக் கல்வி வழியைத் தொடர்வதற்கான ஏராளமான வாய்ப்புகளுடன் வேகமாக வளர்ந்து வரும் சகாப்தத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

 

செலிங்கோ லைஃப் டிகிரி சேவர் நீங்கள் கவலையின்றி உங்கள் பிள்ளையை, அவர்களின் கல்வி இலக்குகளை நோக்கி முன்னேற அனுமதிக்கிறது. நீங்கள் விரிவான ஆயுள் காப்பீட்டுக் கொள்கையின் உரிமையைப் பெறும்போது, உங்கள் பிள்ளையின் மூன்றாம் நிலைக் கல்வியில் கணிசமான தொகையைச் சேமிக்கலாம்.

எவ்வாறு செயற்படுகிறது

உங்கள் குழந்தைக்கான உங்கள் எதிர்கால அபிலாஷைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகள் உங்கள் குழந்தை உலகை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் போது, உங்களுக்கு எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை தீர்மானிக்கும். நீங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்ய விரும்பும் தொகை மற்றும் உங்கள் விருப்பமான ஆயுள் காப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் உங்கள் தவணைத் தொகை அமைந்திருக்கும். செலுத்தப்பட்ட தவணைத் தொகை ஒரு கூட்டு வட்டி பொறிமுறையின் மூலம் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் திரட்டப்படும் அதேவேளை, முதிர்ச்சியின் போது, உங்கள் குழந்தைக்கு ஒரு பெரிய தொகையை உருவாக்குகிறது.

அனுகூலங்கள்

உங்கள் பிள்ளைக்கான கல்வி நிதியானது, நிறுவனம் மாதந்தோறும் அறிவிக்கும் வட்டிக் குவிப்பு விகிதத்துடன் வளர்ச்சியடையும். காலத்தின் முடிவில் காப்புறுதி உரிமையாளர் நிதியை மொத்தமாகப் பெற்று, அதனைத் தமது குழந்தையின் பல்கலைக்கழகக் கல்விக்காகப் பயன்படுத்தலாம்.

 

காப்புறுதி உரிமையாளருக்கு குறைந்தபட்சம் ரூ. 1,000,000/- அளவு விரிவான ஆயுள் காப்பீடும் உள்ளது. காப்புறுதி உரிமையாளரின் அகால மரணம் மற்றும் நிதி உரிமைகோரலின் போது திரட்டப்பட்ட நிதிக் கையிருப்பு உடனடியாக வழங்கப்படும்.

 

 உதாரணம்:

 

நீங்கள் 30 வயதுடையவர் எனக் கொள்வோம். நீங்கள் 20 ஆண்டுகளுக்கு செலுத்தும் வகையில் ரூ. 7,000,000 பெறுமதியான ஆயுள் காப்புறுதியுடன் டிகிரி சேவர் திட்டம் ஒன்றை கொள்வனவு செய்யும் போது, பின்வரும் அனுகூலங்களை எதிர்பார்க்கலாம்.

மாதாந்த தவணைத் தொகை: ரூ. 2614/=

நிதியத்திற்கான மாதாந்த பங்களிப்புமாதாந்த மொத்த கட்டுப்பணம் (ஆயுள் + நிதியம்)20 ஆண்டு இறுதியில் பலன்
7%9%
7,0009,6143,222,6324,045,209
10,00012,6144,603,7605,778,870
15,00017,6146,905,6408,668,305

*இது உதாரணம் மாத்திரமே. அசல் நன்மைகள் மாதாந்தம் பிரகடனம் செய்யப்படும் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப மாற்றமடையலாம். காப்புறுதி செய்யப்பட்டவரின் ஆரோக்கிய நிலைக்கு ஏற்ப கட்டுப்பணம் மாறுபடலாம்.

யாரால் விண்ணப்பிக்க முடியும்

18-60 வயதிற்குட்பட்ட எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தினை 10–30 ஆண்டு காலத்திற்கு பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுகின்றனர்.

கட்டணம் செலுத்தும் முறை

 

இந்தக் காப்புறுதித் திட்டத்திற்கான கட்டுப்பணத்தினை மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் செலுத்த முடியும்.

மேலதிக தெரிவு அனுகூலங்கள்

உங்கள் ஆயுள் காப்புறுதித் திட்டத்தில் பின்வரும் தெரிவுகளை மேலதிக பாதுகாப்பிற்காக இணைத்துக்கொள்ள முடியும்.

 

  • செலிங்கோ லைஃப் ஜீவயாத்ரா
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி திகாசிறி
  • செலிங்கோ லைஃப் மேஜர் செர்ஜெரி
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி ஹாஸ்பிடல் கேஷ்
  • செலிங்கோ லைஃப் ஹெல்த் சப்போட் ப்லஸ்

மேலதிக அனுகூலங்கள்

செலிங்கோ டிகிரி சேவர் உரிமையாளர்கள் தமது விசுவாசத்திற்காக மேலதிக வெகுமதிகளைப் பெறத் தகுதி பெறுவார்கள். சகல காப்புறுதி உரிமையாளர்களும் செலிங்கோ ஃபெமிலி சவாரி வாடிக்கையாளர் ஊக்குவிப்பில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகளும் பிரணாம புலமைப் பரிசில் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.