என்டோமன்ட் திட்டம்

செலிங்கோ லைஃப் ஆகிய நாம் உங்களுக்கு மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்குவதற்கு முயற்சிக்கிறோம் இதன் மூலம் உங்கள் இலக்குகளை அடைந்துகொள்ள உங்களுக்கு சுதந்திரமும் நம்பிக்கையும் கிடைக்கிறது.

செலிங்கோ லைஃப் என்டோமன்ட் திட்டம் என்பது ஒற்றை நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இலகுவான திட்டம் ஆகும். அது நீங்கள் உங்கள் இலக்குகளை நோக்கி உழைக்கும்போது உங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாப்பாக வைத்திருத்தல் ஆகும். நீங்கள் எந்தவொரு எதிர்பாராத நிகழ்வுகளையும் கவலையின்றி எதிர்கொள்வதற்கான ஒரு விவேகமான நிதி முதலீடாகவும் இது செயல்படுகிறது.  

எவ்வாறு செயற்படுகின்றது

விளங்கிக் கொள்ள இலகுவாக இருப்பதும் பாதுகாப்பில் மாத்திரம் கவனம் செலுத்துவதும் என்டோமன்ட் திட்டத்தின் சிறப்பாகும். காப்புறுதி திட்டம் ஒன்றை கொள்வனவு செய்து குறித்த கட்டுப்பணத்தை செலுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கை நீங்கள் தெரிவு செய்யும் வருட காலத்திற்கேற்ப பாதுகாக்கப்படும்.

அனுகூலங்கள்

காப்புறுதி உரிமையாளருக்கு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில், ஆயுள் காப்புறுதி, அவர்களின் பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கப்படும், மேலும், காப்புறுதி உரிமையாளருக்கு உரிய வேறு மேலதிக சலுகைகளும் வழங்கப்படும்.

 

முதிர்வுக் காலம் வரை காப்புறுதி உரிமையாளர் வாழ்ந்து வந்தால், காப்புறுதிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை பயனாளருக்கு உடனடியாக திரும்பச் செலுத்தப்படும்.

உதாரணம்: காப்புறுதி உரிமையாளர் 30 வயதுடையவராக இருந்து, செலிங்கோ லைஃப் என்டோமன்ட் திட்டம் ஒன்றை 20 வருட காலத்திற்கு பெற்றுக்கொள்கிறார் எனின், அவர் பெற்றுக்கொள்ளும் அனுகூலங்கள் கீழுள்ளவாறு இருக்கும்.

உத்தரவாத தொகை
முதிர்வடைய முன்னர் மரணம் சம்பவித்தால்; வழங்கப்படும் தொகை
முதிர்வு (50வயதில், தற்போதைய போனஸ் விகிதத்தில்)

Rs. 100,000

Rs. 100,000 + Bonus

Rs. 190,000

Rs. 250,000

Rs. 250,000 + Bonus

Rs. 475,000

Rs. 500,000

Rs. 500,000 + Bonus

Rs. 950,000

Rs. 1,000,000

Rs. 1,000,000 + Bonus

Rs. 1,900,000

யாரால் விண்ணப்பிக்க முடியும்

18-60 வயதிற்கு இடைப்பட்ட எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தினை 5-40 வருட காலத்திற்கு பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுகின்றனர்.

 

கட்டணம் செலுத்தும் முறை

இந்தக் காப்புறுதித் திட்டத்திற்கான கட்டுப்பணத்தினை மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் செலுத்த முடியும்.

மேலதிக தெரிவு அனுகூலங்கள்

உங்கள் ஆயுள் காப்புறுதித் திட்டத்தில் பின்வரும் தெரிவுகளை மேலதிக பாதுகாப்பிற்காக இணைத்துக்கொள்ள முடியும்.

 

  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி ப்ரொட்டெக்க்ஷன் பெனிபிட்
  • செலிங்கோ லைஃப் ஜீவயாத்ரா
  • செலிங்கோ லைஃப் யுகதிவி
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி இன்கம் பெனிபிட்
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி திகாசிறி
  • செலிங்கோ லைஃப் மேஜர் செர்ஜெரி
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி ஹாஸ்பிடல் கேஷ்
  • செலிங்கோ லைஃப் எக்ஸ்ட்ரா கவர்
  • செலிங்கோ லைஃப் ஹெல்த் சப்போட் ப்லஸ்

மேலதிக அனுகூலங்கள்

செலிங்கோ லைஃப் என்டோமன்ட் காப்புறுதி உரிமையாளர்கள் தமது விசுவாசத்திற்காக மேலதிக வெகுமதிகளைப் பெறத் தகுதி பெறுவார்கள். சகல காப்புறுதி உரிமையாளர்களும் செலிங்கோ ஃபெமிலி சவாரி வாடிக்கையாளர் ஊக்குவிப்பில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகளும் பிரணாம புலமைப் பரிசில் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.