சௌபாக்கிய

இன்றைய நவீன உலகில் பெண்கள் தாயாக, பராமரிப்பாளராக, மகளாக, தலைவியாக மற்றும் சக்திமிக சுதந்திர பிரமுகர்களாக இந்த உலகை வெல்வதில் முக்கிய பாத்திரத்தினை வகிக்கின்றனர். தினமும் அவர்கள் செய்யும் தியாகங்கள் பல, தொழில் மற்றும் குடும்பம் இடையில் சமநிலையைப்பேணி அற்புத சாதனைகளை ஏற்படுத்துகின்றனர்.

செலிங்கோ லைஃப் சௌபாக்கிய அவர்களின் தியாகங்களை போற்றும், அத்துடன் மேலும் பல மடங்கு உயர அழைத்து செல்லும் அவர்களுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் விசேடமாக தயாரிக்கப்பட்ட திட்டமாகும்.

எவ்வாறு செயற்படுகின்றது

சௌபாக்ய திட்டம் உங்களுக்கு ஒரு தனித்துவமான சலுகையை வழங்குகிறது. இதில் காப்புறுதி உரிமையாளருக்கு காப்பீட்டுக் காலத்தின் போது குறிப்பிட்ட கால அளவில் மொத்த தொகை செலுத்தப்படும், அதே நேரத்தில் காப்புறுதி உரிமையாளர் உயிருடன் இருந்தால் ஆயுள் காப்பீடு மற்றும் காலத்தின் முடிவில் முதிர்வு ஆகியவற்றையும் வழங்குகிறது.

அனுகூலங்கள்

இந்தத் திட்டம் மூன்று வகையான அனுகூலங்களைக் கொண்டது.

 

நீங்கள் சௌபாக்ய திட்டத்தினை கொள்வனவு செய்த பின்னர், குறிப்பிடத்தக்க ஒரு தொகைப் பணத்தை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற தவணைக் காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

தவணைக் காலத்தின் முடிவில், காப்புறுதி உரிமையாளர் உத்தரவாதம் அளிக்கப்பட்ட காப்பீட்டு தொகை அல்லது திரண்ட நிதியத் தொகை என இரண்டில் எது அதிகமோ, அதனை முன்னர் செலுத்தப்பட்ட தொகை கழிக்கப்படாமல் பெற்றுக்கொள்ளும் மேலதிக அனுகூலத்தை பெறுவார்.

உதாரணம்:

 

நீங்கள் 30 வயதுடையவராக இருந்து, ரூ. 500,000 அடிப்படை காப்புறுதித் தொகைக்கு செலிங்கோ சௌபாக்ய காப்புறுதியை 20 ஆண்டுகளுக்கு பெற்றுக்கொள்வீர்கள் எனின், ஒவ்வொரு 04 ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் ரூ. 60,000 தவணைக் காலத் தொகையைப் பெறுவீர்கள்.

 

காலம்
அவ்வப்போது செலுத்தும் பணம் (இறுதியில்)
உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை %த்தில்

12 ஆண்டுகள

4வது ஆண்டு
8வது ஆண்டு
12வது ஆண்டு

20%
20%
உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை அல்லது திரண்ட நிதியத் தொகை இரண்டில் எது அதிகமானதோ அது வழங்கப்படும்

16 ஆண்டுகள

4வது ஆண்டு
8வது ஆண்டு
12வது ஆண்டு
16வது ஆண்டு

15%
15%
15%
உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை அல்லது திரண்ட நிதியத் தொகை இரண்டில் எது அதிகமானதோ அது வழங்கப்படும்

20 ஆண்டுகள

4வது ஆண்டு
8வது ஆண்டு
12வது ஆண்டு
16வது ஆண்டு
20வது ஆண்டு

12%
12%
12%
12%
உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை அல்லது திரண்ட நிதியத் தொகை இரண்டில் எது அதிகமானதோ அது வழங்கப்படும்

24 ஆண்டுகள

4வது ஆண்டு
8வது ஆண்டு
12வது ஆண்டு
16வது ஆண்டு
20வது ஆண்டு
24வது ஆண்டு

10%
10%
10%
10%
10%
உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை அல்லது திரண்ட நிதியத் தொகை இரண்டில் எது அதிகமானதோ அது வழங்கப்படும்

20ஆண்டு இறுதியில் a, ரூ. 500,000 – உத்தரவாத தொகை கொள்கைகான
 உங்கள் திரண்ட நிதியத்தின் மிகுதி

வருடாந்தம் 7% பங்குலாபமாக அனுமாணிக்கப்படும் முதிர்வு
அனுகூலம் ரூ. 950,000

வருடாந்தம் 9% பங்குலாபமாக அனுமாணிக்கப்படும் முதிர்வு
அனுகூலம் ரூ.1,180,000
(இது விளக்கவுரை மாத்திரம்)

யாரால் விண்ணப்பிக்க முடியும்

18- 58 வயதிற்கு இடைப்பட்ட ஆண்கள் அனைவரும் இந்த திட்டத்தினை 12,16, 20 மற்றும் 24 ஆண்டு காலத்திற்கு பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள்.

கட்டணம் செலுத்தும் முறை

இந்தக் காப்புறுதித் திட்டத்திற்கான கட்டுப்பணத்தினை மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் செலுத்த முடியும்.

மேலதிக தெரிவு அனுகூலங்கள்

உங்கள் ஆயுள் காப்புறுதித் திட்டத்தில் பின்வரும் தெரிவுகளை மேலதிக பாதுகாப்பிற்காக இணைத்துக்கொள்ள முடியும்.

 

  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி ப்ரொட்டெக்க்ஷன் பெனிபிட்
  • செலிங்கோ லைஃப் ஜீவயாத்ரா
  • செலிங்கோ லைஃப் யுகதிவி
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி இன்கம் பெனிபிட்
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி திகாசிறி
  • செலிங்கோ லைஃப் மேஜர் செர்ஜெரி
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி ஹாஸ்பிடல் கேஷ்
  • செலிங்கோ லைஃப் எக்ஸ்ட்ரா கவர்
  • செலிங்கோ லைஃப் ஹெல்த் சப்போட் ப்லஸ்

மேலதிக அனுகூலங்கள்

செலிங்கோ சௌபாக்ய உரிமையாளர்கள் தமது விசுவாசத்திற்காக மேலதிக வெகுமதிகளைப் பெறத் தகுதி பெறுவார்கள். சகல காப்புறுதி உரிமையாளர்களும் செலிங்கோ ஃபெமிலி சவாரி வாடிக்கையாளர் ஊக்குவிப்பில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகளும் பிரணாம புலமைப் பரிசில் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.