அட்வான்ஸ் பேமென்ட்

செலிங்கோ லைஃப் முற்பணக் கொடுப்பனவுத் திட்டம் என்பது உங்கள் எதிர்காலத்தை முன்கூட்டியே திட்டமிட உதவும் ஒரு விதிவிலக்கான காப்புறுதித் திட்டமாகும்.

 

இந்த தனித்துவமான காப்புறுதித் திட்டம் உங்களுக்கு முதலீட்டு வாய்ப்பை வழங்கி, நீங்கள் எதிர்பார்க்கும் உங்களின் நீண்ட மற்றும் குறுகிய கால நிதித் தேவைகளை திட்டமிட வழியேற்படுத்துகின்றது. அத்துடன், சிறந்த ஆயுள் காப்புறுதியை வழங்கி, உங்களதும் உங்கள் அன்பின்குரியவர்களதும் நலனை உறுதி செய்கின்றது.

 

எனவே, உங்கள் பிள்ளையின் ஆரம்ப- உயர் மற்றும் மேலதிக கல்வியில் முதலீடு செய்தல், நீங்கள் விரும்பிய வீட்டை நிர்மாணிக்க அல்லது உங்கள் பிள்ளையின் திருமணம் என உங்களால் வாழ்க்கையின் மாற்றங்களுக்கு பயமும் தயக்கமும் இன்றி முகங்கொடுக்க முடியும்.

எவ்வாறு செயற்படுகின்றது

முற்பணக் கொடுப்பனவுத் திட்டம் நிதி ரீதியான நன்மை மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டு பிரதான அலகுகளை கொண்டது.

 

இந்த ஆயுள் காப்புறுதித் திட்டம் மூலம் ஒரு முழுமையான பாதுகாப்பை வழங்குவதோடு, உங்கள் அடிப்படைக் காப்புறுதி தொகைக்கு ஏற்ப முற்பண கொடுப்பனவுத் தொகையை அவ்வப்போது பெற்று, காப்பீட்டு கால முடிவுக்கு முன்னர் முழுமையான தொகையைப் பெற்றுக் கொள்வீர்கள்

அனுகூலங்கள்

முற்பணக் கொடுப்பனவுகள் காப்பீட்டு காலத்தின் நிறைவுக்கு முன்னர், குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தப்படும். இவ்வாறு முன்கூட்டியே வழங்கப்படும் வருமானம் காரணமாக உங்கள் எதிர்கால செலவுகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது.

 

காப்புறுதி உரிமையாளரின் எதிர்பாராத மரணத்தின் போது, ஆயுள் காப்புறுதி உடனடியாக பயனாளருக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட முற்பண கொடுப்பனவில் எவ்வித விலக்கலும் இன்றி முழுமையாக செலுத்தப்படும்.

 

உதாரணம்:

 

காப்புறுதி உரிமையாளர் 30 வயதுடையவராக இருக்கும் போது, ரூ. 500,000 பெறுமதியான அடிப்படைக் காப்பீட்டை கீழுள்ள அட்டவணையின் பிரகாரம் பெற்றுள்ளீர்கள். சகல காப்பீடுகளும் முதிர்வடையும் வரையில் நீங்கள் செலிங்கோ முற்பண கொடுப்பனவை அவ்வப்போது பெறுகின்றீர்கள் (அட்டவணையில் உள்ளவாறு). தவணை காலத்தின் இறுதியில் உத்தரவாதமளிக்கப்பட்ட தொகையின் மீதியுடன், காப்புறுதிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட இலாபப் பங்கீட்டையும் (போனஸ்) நீங்கள் பெறுவீர்கள்.

காலம்
முற்பண கொடுப்பனவு
உறுதியளிக்கப்பட்ட தொகை
அசல் ரூபாய் மதிப்பு (ரூ)

10 ஆண்டுகள்

3வது ஆண்டு
7வது ஆண்டு
10வது ஆண்டு

20%
25%
55% + போனஸ்

100,000
125,000
275,000 + போனஸ்

15 ஆண்டுகள்

4வது ஆண்டு
10வது ஆண்டு
15வது ஆண்டு

20%
25%
55% + போனஸ்

100,000
125,000
275,000 + போனஸ்

20 ஆண்டுகள்

4வது ஆண்டு
10வது ஆண்டு
15வது ஆண்டு
20வது ஆண்டு

15%
20%
20%
45% + போனஸ்

75,000
100,000
100,000
225,000 + போனஸ்

25 ஆண்டுகள்

5வது ஆண்டு
10வது ஆண்டு
15வது ஆண்டு
20வது ஆண்டு
25வது ஆண்டு

15%
20%
20%
20%
25% + போனஸ்

75,000
100,000
100,000
100,000
125,000 + போனஸ்

யாரால் விண்ணப்பிக்க முடியும்

18-60 வயதிற்கு இடைப்பட்ட எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தினை 10, 15, 20, அல்லது 25 வருட காலத்திற்கு பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுகின்னர்

கட்டணம் செலுத்தும் முறை

இந்தக் காப்புறுதித் திட்டத்திற்கான கட்டுப்பணத்தினை மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் செலுத்த முடியும்.

மேலதிக தெரிவு அனுகூலங்கள்

உங்கள் ஆயுள் காப்புறுதித் திட்டத்தில் பின்வரும் தெரிவுகளை மேலதிக பாதுகாப்பிற்காக இணைத்துக்கொள்ள முடியும்.

 

  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி ப்ரொட்டெக்க்ஷன் பெனிபிட்
  • செலிங்கோ லைஃப் ஜீவயாத்ரா
  • செலிங்கோ லைஃப் யுகதிவி
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி இன்கம் பெனிபிட்
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி திகாசிறி
  • செலிங்கோ லைஃப் மேஜர் செர்ஜெரி
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி ஹாஸ்பிடல் கேஷ்
  • செலிங்கோ லைஃப் எக்ஸ்ட்ரா கவர்
  • செலிங்கோ லைஃப் ஹெல்த் சப்போட் ப்லஸ்

மேலதிக அனுகூலங்கள்

செலிங்கோ லைஃப் முற்பணக் கொடுப்பனவு உரிமையாளர்கள் தமது விசுவாசத்திற்காக மேலதிக வெகுமதிகளைப் பெறத் தகுதி பெறுவார்கள். சகல காப்புறுதி உரிமையாளர்களும் செலிங்கோ ஃபெமிலி சவாரி வாடிக்கையாளர் ஊக்குவிப்பில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகளும் பிரணாம புலமைப் பரிசில் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.