ரன் தரு

உங்கள் பிள்ளைகள் தமது கல்வியைத் தொடரவும், இலக்குகளை இடையூறுகள் இன்றி அடைந்துகொள்ளவும் அனைத்தையும் செய்ய வேண்டியது பெற்றோராக உங்கள் கடமையாகும். உங்கள் குழந்தைகள், தமது இலட்சியங்களை நோக்கி நகரும் போது, அவர்களை நிதி ரீதியாக ஆதரிக்கவும் வழிநடத்தவும் ஒரு வலுவான திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும்.

 

செலிங்கோ லைஃப் ரன் தரு என்பது உங்கள் குழந்தையின் கல்வி எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கான சிறந்த திட்டமாகும்.

எவ்வாறு செயற்படுகின்றது.

செலிங்கோ ரன்தரு உங்கள் அன்பிற்குரியவர்களின் அனைத்து கல்வித் தேவைகளின் போதும் உதவக்கூடிய 2 கல்வி நிதியங்களைக் கொண்டு இயங்குகிறது.

அனுகூலங்கள்

காப்புறுதி காலப் பகுதியில் காப்புறுதி உரிமையாளர் உயிரிழந்தால், ரன் தரு அடிப்படைக் கல்வி நிதியம் உடனடியாக செயற்பட ஆரம்பிக்கும். இந்நிதியம் உடனடியாக பயனாளிக்கு உத்தரவாதம் அளித்த அடிப்படை தொகையின் 5 மடங்கை உடன் செலுத்தி அவர்களின் கல்வி செயற்பாடுகள் தடைகள் இன்றி தொடர்வதை உறுதிப்படுத்தும்.

ரன் தரு உயர்கல்வி நிதியம் அடிப்படைக் காப்புறுதித் தொகையைப் போன்று குறைந்தபட்சம் 5 மடங்கு அதிகரித்துக் காணப்படும். உங்கள் பிள்ளைகள் 18 வயதை பூர்த்தி செய்யும் போது, வழங்கப்படும் அத்தொகையை அவர்களது உயர்கல்விக்காக பயன்படுத்த முடியும். அல்லது தமது சொந்த வணிகத்தை ஆரம்பிக்க முடியும்.

விபத்து காரணமாக ஏற்படும் காப்புறுதி உரிமையாளரின் மரணத்தின் போது, இத்தொகைகள் இரண்டு மடங்காகும்.

 

கீழுள்ள அட்டவணை உங்கள் பிள்ளை ரன் தரு அனுகூலத்தை பெற்றுக்கொள்ளும் விதத்தினை உதாரணத்துடன் விளக்குகிறது.

யாரால் விண்ணப்பிக்க முடியும்

18-60 வயதிற்கு இடைப்பட்ட எவரும் இந்தக் காப்புறுதித் திட்டத்தினை 5–25 ஆண்டு காலத்திற்கு பெற்றுக் கொள்ள தகுதி பெறுகின்றனர். உங்கள் பிள்ளைகள் 6 மாதம் முதல் 18 வருடங்களுக்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை

இந்தக் காப்புறுதித் திட்டத்திற்கான கட்டுப்பணத்தினை மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் செலுத்த முடியும்.

மேலதிக தெரிவு அனுகூலங்கள்

உங்கள் ஆயுள் காப்புறுதித் திட்டத்தில் பின்வரும் தெரிவுகளை மேலதிக பாதுகாப்பிற்காக இணைத்துக்கொள்ள முடியும்.

 

  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி ப்ரொட்டெக்க்ஷன் பெனிபிட்
  • செலிங்கோ லைஃப் ஜீவயாத்ரா
  • செலிங்கோ லைஃப் யுகதிவி
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி இன்கம் பெனிபிட்
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி திகாசிறி
  • செலிங்கோ லைஃப் மேஜர் செர்ஜெரி
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி ஹாஸ்பிடல் கேஷ்
  • செலிங்கோ லைஃப் எக்ஸ்ட்ரா கவர்
  • செலிங்கோ லைஃப் ஹெல்த் சப்போட் ப்லஸ்

மேலதிக அனுகூலங்கள்

செலிங்கோ லைஃப் ரன்தரு காப்புறுதி உரிமையாளர்கள் தமது விசுவாசத்திற்காக மேலதிக வெகுமதிகளை பெற தகுதி பெறுவார்கள். சகல காப்புறுதி உரிமையாளர்களும் செலிங்கோ ஃபெமிலி சவாரி வாடிக்கையாளர் ஊக்குவிப்பில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பை பெறுவார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகளும் பிரணாம புலமைப்பரிசில் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.