You are currently viewing ‘குடும்ப சவாரி’ வெற்றியாளர்களை மறக்க முடியாத மலேசிய சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற செலிங்கோ லைஃப்

‘குடும்ப சவாரி’ வெற்றியாளர்களை மறக்க முடியாத மலேசிய சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற செலிங்கோ லைஃப்

Share On

செலிங்கோ லைஃப் தனது முதன்மை வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டமான ‘குடும்ப சவாரியை’ பாரிய வெகுமதித் திட்டத்தின் 19ஆவது கட்டத்தின் கீழ், மேலும் 10 காப்புறுதிதாரர் குடும்பங்களுக்கு முழுச் செலவுகளும் ஏற்கப்பட்ட மறக்க முடியாத மலேசிய சுற்றுலா அனுபவத்தை வழங்கியுள்ளது.

வெற்றிபெற்ற குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 40 பேர் இந்தச் சுற்றுலாவில் பங்கேற்றனர். பெற்றோர்களும் குழந்தைகளும் ஒன்றாக மகிழ்ச்சிகரமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள், ஓய்வு நேர பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு கேளிக்கை அம்சங்களை உள்ளடக்கிய சிறப்பாகத் திட்டமிடப்பட்ட பயண நிகழ்ச்சித் திட்டம் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக, வெற்றியாளர்கள் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரின் முக்கிய சுற்றுலாத் தலங்களை முழுமையாகப் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றனர். உலகப் புகழ்பெற்ற பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் (Pநவசழயௌ வுறin வுழறநசள), அக்வேரியா கேஎல்சிசி (யுஙரயசயை முடுஊஊ) ஆகிய இடங்களுக்கான விஜயங்களும், முடுஊஊ டுயமந ளுலஅphழலெ-யில் மாலை நேரத்தில் இடம்பெறும் கண்கவர் இசையுடன் ஒத்திசைவான நீரூற்று காட்சியையும் குடும்பத்தினர் ரசிக்கும் வாய்ப்பும் இந்தப் பயணத்தின் சிறப்பம்சங்களாக அமைந்திருந்தன.

மேலும், சாகசமும் உற்சாகமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் வகையில், குடும்பத்தினர் புகழ் பெற்ற ஜென்டிங் ஹைலண்ட்ஸ் (புநவெiபெ ர்iபாடயனௌ) சுற்றுலாத் தலத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். கேபிள் கார் பயணத்தின் மூலம் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாதைக் காட்சிகளை ரசித்த அவர்கள், பின்னர் அப்பிராந்தியத்தின் முன்னணி பொழுதுபோக்கு நிலையங்களில் ஒன்றான ஜென்டிங் ஸ்கைவேர்ல்ட்ஸ் கேளிக்கைப் பூங்காவில் முழு நாளும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவித்தனர்.

செலிங்கோ லைஃப்பின் ‘குடும்ப சவாரி’ பிரசாரத் திட்டத்தின் வர்த்தகநாம தூதுவர்களான ரோஷன், குஷ்லானி மற்றும் மின்னத் ரணவன ஆகியோர் முழுப் பயணத்திலும் குடும்பங்களுடன் இணைந்து பயணித்ததன் மூலம், இந்த அனுபவம் மேலும் சிறப்புமிக்கதாக அமைந்தது. அவர்கள் குடும்பத்தினருடன் அன்போடும் நெருக்கமாகவும் கலந்துரையாடி, பயணம் முழுவதும் மகிழ்ச்சியும் கொண்டாட்ட உணர்வும் நிறைந்த சூழலை உருவாக்கினர்.

இந்தச் சுற்றுலாவிற்கான அனைத்து செலவுகளையும் செலிங்கோ லைஃப் முழுமையாக ஏற்றுக்கொண்டது. வழக்கமான சலுகைகளைத் தாண்டி, அர்த்தமுள்ள மற்றும் மறக்க முடியாத அனுபவங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் விசுவாசத்தை அங்கீகரிப்பதில் நிறுவனம் தொடர்ந்து கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது மீண்டும் வெளிப்படுத்துகிறது.

‘குடும்ப சவாரி’ ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனுபவமிக்க வெகுமதிகளில் மலேசிய சுற்றுலாவும் ஒன்றாகும். இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வாடிக்கையாளர் ஈடுபாட்டு முயற்சிகளில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ள இந்தத் திட்டம், காப்புறுதிதாரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஒன்றாக மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கும் தனித்துவமான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.