தரவுடன் உரிமையாளரின் உரிமைகள்

உங்கள் ஆயுள் காப்புறுதி பங்குதாரராக, செலிங்கோ லைஃப் உங்கள் தனியுரிமையை மிக முக்கியத்துவத்துடன் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது.

உங்கள் ஆயுள் காப்புறுதி பங்குதாரராக, செலிங்கோ லைஃப் உங்கள் தனியுரிமையை பாதுகாக்கும் பொறுப்பை மிகுந்த முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்கிறது.

உங்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குதல், எங்கள் வணிகத்தை மேம்படுத்துதல், எங்கள் காப்புறுதித் திட்டங்கள்   விளம்பரப்படுத்துதல் மற்றும் எங்கள் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்க, பின்வரும் வகையான தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரித்து செயலாக்கலாம்

உங்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க, எங்கள் தொழில்முறையை மேம்படுத்த, எங்கள் காப்புறுதித் திட்டங்களை விளம்பரப்படுத்த, மேலும் சட்டப்பூர்வ கடமைகளை பூர்த்தி செய்ய, கீழ்க்கண்ட வகையான தனிப்பட்ட தரவுகளை நாம் சேகரித்து செயல்படுத்தலாம்.

  • தனிப்பட்ட அடையாளங்காட்டிகள்: பெயர், பிறந்த தேதி, பாலினம் (Gender), தேசிய அடையாள அட்டை (NIC) அல்லதுகடவுச்சீட்டு விவரங்கள்.
  • தொடர்பு விவரங்கள்: முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி.

 காப்புறுதித் தகவல்: காப்புறுதி ஒப்பந்த விவரங்கள், உரிமைகோரல் வரலாறு, பயனாளி விவரங்கள்.

  • மருத்துவ தகவல் மற்றும் பிற முக்கியத் தகவல்கள்: மருத்துவ வரலாறு அல்லது அறிக்கைகள், வாழ்க்கை முறை, இறப்புச் சான்றிதழ், குற்றவியல் தண்டனை விவரங்கள் (காப்புறுதி ஒப்பந்தம் உருவாக்குதல் (Underwriting) அல்லது கோரிக்கைகளுக்குத் (Claims) தேவைப்பட்டால்).
  • நிதி விவரங்கள்: வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட்ஃடெபிட் கார்டு, வருமான விவரங்கள் மற்றும் கட்டண வரலாறு.
  • அடையாளச் சரிபார்ப்பு (Identity Verification) மற்றும் பின்னணி திரையிடல் ஆய்வு செய்து (Background Screening) ஆவணப்படுத்தல் (பயனர் சுயவிவரங்களை அமைப்பதற்கான படங்கள், டிஜிட்டல் நுழைவு செயல்முறைக்கு (Digital Onboarding) (KYC சரிபார்ப்பின் வீடியோ)
  • டிஜிட்டல் தகவல் : குக்கீமற்றும் பிற தொழில்நுட்பங்களால் சேகரிக்கப்பட்ட தகவல் மற்றும் பிற.

 மேற்கண்ட சேகரிக்கப்பட்ட தகவல்கள் வணிக மற்றும் சட்டத் தேவைகளுக்காக கீழேயுள்ள தரப்பினருடன் பகிரப்படலாம்

  • எங்கள் முகவர்கள், ஒப்பந்த சேவை வழங்குநர்கள் (அதாவது கிளவுட் சேமிப்பு வழங்குநர்கள் (Cloud Storage Providers) மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள்)
  • மீள் காப்பீட்டாளர்கள் , கணக்கு நிபுணர்கள் (Acturaies)
  • கொடுப்பனவு முறையின் இயக்குநர்கள் (உதாரணமாக, கிரெடிட் கார்டு கொடுப்பனவுகள்)
  • எங்கள் நிதி ஆலோசகர்கள், சட்ட ஆலோசகர்கள் மற்றும்கணக்காய்வாளர்கள் போன்ற தொழில்முறை ஆலோசகர்கள்
  • மோசடி தடுப்புக் குழுக்கள் அல்லது பிற அமைப்புகள், மோசடி அல்லது பிற தவறுகளை கண்டறிந்து, விசாரணை செய்து, தடுக்கும் நோக்கில்.
  • எந்தவொருஅதிகாரமுள்ள உள்ள ஒழுங்குமுறை (சநபரடயவழசல) அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும்சட்ட அமுலாக்க அமைப்புகள்

கட்டுப்பாட்டு அமைப்புகள் (Regulatory Bodies), அரச நிறுவனங்கள், மற்றும் எந்தவொரு அதிகாரப்பூர்வ நீதித்துறை சட்ட அமுலாக்க அமைப்புகளும்.

இலங்கையின் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்கத் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒரு தரவு உரிமையாளராக நீங்கள் பின்வரும் உரிமைகளைப் பெறுவீர்கள்:

  • உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் உங்கள் தனிப்பட்ட தரவைஅணுகவும்.
  • உங்கள் தனிப்பட்ட தரவுகள் சரியாக இல்லாவிட்டால் அல்லது முழுமையடையாமல் இருந்தால் திருத்தங்களைக் கோரவும்.
  • சட்ட அல்லது ஒப்பந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, உங்கள் தரவை நீக்கக் கோரவும்.

உங்கள் ஒப்புதலின் அடிப்படையில் தரவு செயலாக்கம் மேற்கொள்ளப்பட்டால்,  அந்த ஒப்புதலை  திரும்பப் பெறவும்.

  • உங்கள் தனிப்பட்ட தரவின் செயலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க அல்லது அதை கட்டுப்படுத்த கோரலாம்.
  • உங்கள் உரிமைகள் மீறப்பட்டதாக நீங்கள் நம்பினால், இலங்கையின் தரவுப் பாதுகாப்பு ஆணையத்திடம் முறைப்பாடுஅளிக்கலாம்.

இருப்பினும், உங்கள் தரவு  தனியுரிமை குறித்து ஏதேனும் கவலைகள் இருந்தால் அல்லது சந்தேகத்திற்குரிய தரவு மீறலைப் பற்றி  புகாரளிக்க விரும்பினால் அல்லது உங்கள்

தரவுகளின் உரிமைகளைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் எங்களை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரி மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

  • மின்னஞ்சல்: dpo@ceylife.lk (Ceylinco Life Data Protection Officer)
  • பதவி : தரவு பாதுகாப்பு அதிகாரி

செலிங்கோ லைஃப் இன்சூரன்ஸ் லிமிடெட்

செலிங்கோ லைஃப் டவர்

எண் 106,ஹேவ்லாக் சாலை

கொழும்பு 05

குறிப்பு: உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்த, உங்களிடம் குறைந்தது  ரூ.1000/=   செயலாக்கக் கட்டணமாக அறவிடப்படலாம்.

எங்களின்  தரவு தனியுரிமை கொள்கை செலிங்கோ லைஃப் இணையதளத்தில் ( https://www.ceylincolife.com/privacy-policy/) உங்கள் குறிப்புக்கு கிடைக்கிறது.