ஓய்வூதிய சேமிப்பான்
ஓய்வூதிய சேமிப்பான் என்பது இலங்கை ஆயுள் காப்புறுதி சந்தையில் முதன்மையான ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இது ஒரு பிரத்யேகமான ஓய்வூதிய மற்றும் வாழ்க்கைப் பாதுகாப்புத் திட்டமாகும். இது உங்கள் கனவு ஓய்வூதிய வாழ்க்கையைக் கட்டியெழுப்ப உங்களுக்கு உதவுகிறது. அதேநேரம், காத்திருக்கும் நிச்சயமற்ற நிலைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. செலிங்கோ லைஃப் ஓய்வூதிய சேமிப்பான், கவலையில்லாமல் ஓய்வு காலத்தை அனுபவிக்க உதவுகிறது. அங்கு உங்களின் பொன்னான ஆண்டுகளுக்கான இலக்குகளை நீங்கள் சுதந்திரமாகப் பின்தொடரலாம்.
நாம் உங்களுக்கு வழங்குவது
ஒரு வளர்ச்சியடையும் ஓய்வூதிய நிதியம் ஓய்வூதிய நிதியம்
நீங்கள் செலுத்திய அடிப்படை பிரீமியத்திற்காக நிறுவனம் அறிவித்த மாதாந்த ஈவுத்தொகை விகிதங்களில் கட்டமைக்கப்பட்ட ஓய்வூதிய நிதியை ஓய்வூதிய சேமிப்பான் உறுதிசெய்கிறது. ஓய்வூதிய நிதிக்கு உங்கள் சொந்த பங்களிப்பை நீங்கள் முடிவு செய்து, மாதாந்த, காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டுதோறும் நிதியை உருவாக்கத் தொடங்கலாம்.
ஆயுள் பாதுகாப்பு அனுகூலம்
நீங்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை உறுதிசெய்யும் சிறந்த கொடுப்பனவுகளுடன் கூடிய ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவீர்கள். காப்பீட்டுக் காலப்பகுதியில் நீங்கள் உயிரிழக்க நேரிட்டால், உங்கள் பயனாளிகள் பின்வரும் அனுகூலங்களைப் பெறுவார்கள்:
- அடிப்படை உத்தரவாதத் தொகை
- குடும்ப பாதுகாப்பு அனுகூலம்
- பிரீமியம் உத்தரவாத அனுகூலம்
- ஏதேனும் உரிமை இருந்தால், ஏனைய துணை அனுகூலங்கள்
- முதிர்வுத் திகதியில் மொத்த தொகையைச் செலுத்துதல்
சுகாதார மற்றும் இணை அனுகூலங்கள்
இந்தத் திட்டம் செலிங்கோ லைஃப் இல் கிடைக்கும் பலதரப்பட்ட மேலதிக சுகாதார அனுகூலங்களைச் சேர்த்து, வாழ்க்கைக்கான சிறந்த சுகாதார ஆதரவை உங்களுக்கு வழங்க அனுமதிக்கிறது.
- விபத்து ரீதியான மரண அனுகூலம்
- மொத்த / பகுதி மற்றும் நிரந்தர ஊனமுற்றோருக்கான அனுகூலம்
- தீவிர நோய் அனுகூலம்
- மருத்துவமனை பண உதவி அனுகூலம்
- பெரிய அறுவை சிகிச்சை அனுகூலம்
- மருத்துவச் செலவு திருப்பிச் செலுத்தும் அனுகூலம்
பிரீமியம் உத்தரவாத அனுகூலம்
துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், செலிங்கோ லைஃப் உங்கள் ஓய்வூதிய நிதிக்கான அடிப்படை பிரீமியத்தை ஓய்வு பெறும் திகதி வரையில் தொடர்ந்து செலுத்தும். அத்தோடு, நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நிதியை வளரச் செய்யும். உங்களுக்கு மொத்தமாக மற்றும் நிரந்தர ஊனம் ஏற்பட்டால், நீங்கள் ஓய்வு பெறும் திகதி வரை அடிப்படை பிரீமியம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தும்.
லோயல்டி வெகுமதிகள்
நீங்கள் செலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவுகளையும் அதன் நிலுவைத் திகதியிலிருந்து 180 நாட்களுக்குள் செலுத்தியிருந்தால், செலிங்கோ லைஃப், காப்புறுதித் திட்ட காலத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில், நிதிக்கான உங்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் லோயல்டி வெகுமதிகளை உங்கள் ஓய்வூதிய நிதிக்கு செலுத்தப்படும். இது ஓய்வூதிய நிதியை மேலும் அதிகரிக்கும் செயலாகும். எனவே, நீங்கள் செய்ய வேண்டியது யாதெனில், உங்கள் அனைத்து கொடுப்பனவுகளையும் சரியான நேரத்தில் செலுத்துவதாகும். அனைத்து லோயல்டி வெகுமதிகளும் காப்புறுதித் திட்ட காலம் மற்றும் பிரீமியம் செலுத்தும் முறை என்பவற்றைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
ஓய்வூதிய நிதி வளர்ச்சி
உங்கள் ஓய்வூதிய நிதியானது, தொழில்முறை சார் முதலீட்டு முகாமையாளர்களால் மிகக் கவனமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உங்கள் ஓய்வூதிய நிதி ஒவ்வொரு மாதமும் வளர்ச்சியடைவதை உறுதிசெய்யும் அதேவேளை, இறுதியில் கவர்ச்சிகரமான முதிர்ச்சிப் பெறுமானத்தையும் உறுதி செய்வார்கள்.
காப்புறுதி உரிமையாளரின் தற்போதைய வயது: 35 வருடங்கள்
ஓய்வூதிய நிதிக்கான வருடாந்திர அடிப்படை பிரீமியம் மற்றும் உறுதியளிக்கப்பட்ட அடிப்படைத் தொகை | மொத்த விசுவாச வெகுமதிகள் (RS.) | அனைத்து பிரீமியங்களையும் (ரூ.) செலுத்திய 20 வருட முடிவில் திரும்பப் பெறுங்கள் (முதிர்வு மதிப்பு + விசுவாச வெகுமதிகள்) | ||
4% | 8% | 12% | ||
100,000 | 1,150,000 | 3,754,773 | 5,301,326 | 7,801,698 |
250,000 | 2,875,000 | 9,419,707 | 13,298,754 | 19,569,336 |
500,000 | 5,750,000 | 18,861,265 | 26,627,799 | 39,182,067 |
வருடத்திற்கான அனைத்து நிர்வாகக் கட்டணங்கள் மற்றும் அனைத்து பிரீமியங்களும் அந்தந்த நிலுவைத் திகதிகளில் செலுத்தப்பட்ட பின்னர் வருடாந்தம் 4%, 8% மற்றும் 12% என்ற அனுமான ஈவுத்தொகை விகிதங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு உதாரணம் மட்டுமே மேலே காட்டப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட ஈவுத்தொகை விகிதங்கள் உத்தரவாதமளிக்கப்படவில்லை என்பதோடு, நடைமுறையில் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப, ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டதாகும். மேலும், நிறுவனம் செலுத்தும் உண்மையான முதிர்வு அனுகூலம் அறிவிக்கப்பட்ட உண்மையான ஈவுத்தொகை விகிதங்களைப் பொறுத்ததே ஆகும். நீங்கள் தேர்ந்தெடுத்த பிரீமியம் கட்டண முறையின் அடிப்படையில், மேலே விளக்கப்பட்ட மதிப்புகள் மாறும் என்பதையும் கருத்திற்கொள்க. (உதாரணமாக, அரை வருட, காலாண்டு மற்றும் மாதாந்த அடிப்படையில்).
பாதுகாப்பு அனுகூலங்களுக்கான உதாரணங்கள்:
உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அனுகூலங்கள் |
மரணத்தின் போதான அனுகூலங்கள் |
---|---|
உயிரிழப்புக் காப்பீடு (உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படைத் தொகை + மேலதிக ஆயுள் காப்பீடு) |
ரூ. 1,000,000* |
உத்தரவாதமளிக்கப்பட்ட பிரீமியம் அனுகூலங்கள் (PAB) |
பிரதான ஆயுள் காப்பீட்டாளரின் மரணம் அல்லது முழுமையான நிரந்தர ஊனத்தின் போது, தவணைக் கட்டணங்கள் செலுத்துவது தள்ளுபடி செய்யப்படும். எனினும், ஓய்வூதிய நிதியின் வளர்ச்சி தொடரும். |
*உயிரிழப்புக் காப்பீட்டுத் தொகையை ஆயுள் காப்பீட்டாளரால் தீர்மானிக்க முடியும்.
வருடாந்த அடிப்படை பிரீமியம் ரூ. 100,000 அடிப்படைத் தொகைக்கான காப்பீட்டை வழங்கவும் உங்கள் ஓய்வூதிய நிதியை வளர்ச்சியடையச் செய்யவும் பயன்படுத்தப்படும். ‘மேலதிக ஆயுள் காப்பீடு’ மற்றும் ‘பிரீமியம் அஷ்யூரன்ஸ் பெனிபிட்’ ஆகியவற்றுக்கான தவணைக் கட்டணத் தொகைகள் உட்பட வருடாந்த மொத்த பிரீமியம் ரூ. 113,352 ஆகும்.