ஈஸி லைஃப்
திட்டத்தின் விளக்கம்
சிறப்பான காப்புறுதித் திட்டமொன்றின் மூலம் பாதுகாப்பொன்றினை பெற்றுக் கொள்ளுங்கள். ஊங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களை மலிவான வழியில் பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த வருடாந்த பாதுகாப்பானது உங்களை 6 பாரிய நோய்கள் (புற்றுநோய் / மாரடைப்பு / நரம்பிழுப்பு / பிரதான உறுப்பு மாற்றுகை / முடியுரு நாடிச் சத்திர சிகிச்சை (ஒன்று அல்லது மேற்பட்ட) / சிறுநீரக செயலிழப்பு) மற்றும் இயற்கையான அல்லது விபத்துக் காரணமான இறப்பின் போதான நிதிப்பாதுகாப்பு என்பவற்றை வழங்குகின்றது. இப்பாதுகாப்பு இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடியதும், மருத்துவ பரிசோதனைகள் வேண்டப்படாததும். மற்றும் 18 முதல் 55 வயதுக் குழுவினருக்கு கிடைக்கக்கூடிய ஒரு பாதுகாப்பாகும். இந்த புத்திசாலித்தனமான பாதுகாப்பானது நீங்கள் உங்கள் எதிர்கால வாழ்வில் கவனம் செலுத்தும் வேளை உங்களுக்கு மன நிம்மதியை தருகின்றது.
இப்பாதுகாப்பிற்கான தகுதிகள்
1. செலிங்கோ ஈஸி லைஃப் திட்டம் என்பது என்ன?
செலிங்கோ லைஃப் ஈஸி லைஃப் திட்டமானது பிக்-மீ (Pickme) வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பான காப்புறுதித் திட்டமாகும். இது பின்வரும் எதிர்பாராத நிகழ்வுகளின் போது நிதிப்பாதுகாப்பை வழங்குகின்றது.
- இறப்பு அனுகூலம்
- விபத்து மரண அனுகூலம்
- ஆறு முக்கிய பாரிய நோய்களில் ஒன்றின் நோய் கண்டறிதல் அல்லது சத்திர சிகிச்சைக்கு உட்படுதல்
இத்திட்டமானது, கடினமான வேளைகளில் உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு நிதிப் பொறுப்புகளை முகாமைத்துவம் செய்ய உதவுகின்றது. இத்திட்டமானது நீங்கள் சம்பாதிக்கும் போது பாதுகாப்பினை பெறும் ஒரு எளிய மற்றும் செலவு குறைந்த வழிமுறையாகும்.
2. இதற்கு வயது வரம்பு உள்ளதா?
ஆம் நீங்கள் இக்காப்புறுதிக்கு விண்ணப்பிக்க உங்கள் வயது கிட்டிய பிறந்த நாளுக்கு அமைவாக 18 தொடக்கம் 55 இற்கு இடையில் அமைய வேண்டும்.
பாதுகாப்பு தொடர்பானது
1. எத்தொகை காப்புறுதி பாதுகாப்பை நான் பெறலாம்?
பெறக்கூடிய காப்புறுதித் தொகையானது நீங்கள் பெறும் திட்டவகையில் பின்வருமாறு அமையும்:
வழங்கப்படும் திட்டங்கள் இறப்பு அனுகூலம் விபத்து மரண அனுகூலம் பாரிய நோய் பாதுகாப்பு
வழங்கப்படும் திட்டங்கள் |
இறப்பு அனுகூலம் |
விபத்து மரண அனுகூலம் |
பாரிய நோய் பாதுகாப்பு |
|---|---|---|---|
|
பிறைமறி |
100,000 |
100,000 |
100,000 |
|
கிளசிக் |
200,000 |
200,000 |
200,000 |
|
சிக்னேஷர் |
300,000 |
300,000 |
300,000 |
|
சுப்பீரியர் |
400,000 |
400,000 |
400,000 |
|
பிரீமியர் |
500,000 |
500,000 |
500,000 |
2. வழங்கப்படும் பாதுகாப்புகள் / அனுகூலங்கள் என்ன?
இக்காப்புறுதித் திட்டமானது பின்வரும் சந்தர்ப்பங்களில் நிதிப்பாதுகாப்பை வழங்குகின்றது:
· இறப்பு அனுகூலம் – உங்கள் மறைவின் போது, உங்கள் குடும்பத்திற்கு இறப்பு அனுகூலத்திற்கு சமனான ஒரு முழுத்தொகைக் கொடுப்பனவு செலுத்தப்படும்.
· விபத்து மரண அனுகூலம் – இறப்பானது, விபத்து காரணமாக நிகழின் இறப்பு அனுகூலத்திற்கு சமனான மேலதிக கொடுப்பனவொன்று செய்யப்படும்.
· பாரிய நோய் பாதுகாப்பு – பின்வரும் ஏதாவதொரு ஆறு பாரிய நோய்களில் ஒன்றிற்கான நோய் கண்டறியப்படும் போது அல்லது அதற்காக சத்திரசிகிச்சைக்கு உட்படும் போது, நீங்கள் கொடுப்பனவொன்றிளை பெறுவீர்கள்:
- புற்றுநோய் (Cancer)
- மாரடைப்பு (Heart Attack)
- நரம்பிழுப்பு (Stroke)
- பிரதான உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை (Major Organ Transplant)
- முடியுரு நாடி சத்திரசிகிச்சை (Coronary Artery Surgery)
- சிறுநீரக செயலிழப்பு (Kidney failure)
3. எனது பாதுகாப்பு எப்போது ஆரம்பிக்கும்?
உங்கள் காப்புறுதி பாதுகாப்பு ஆரம்பிப்பது:
- உங்கள் பாதுகாப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், நீங்கள் உங்கள் முதலாவது கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கும் போது மற்றும்.
- பாதுகாப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்த உங்கள் காப்புறுதிச் சான்றிதழ் வினியோகிக்கப்பட்டிருக்கும் போது.
4. இக்காப்புறுதிப் பாதுகாப்பிற்கான காத்திருப்புக் காலங்கள் எவை?
· விபத்து மரண அனுகூலத்தை தவிர ஏனைய எல்லா அனுகூலங்களிற்கும் (பாதுகாப்புகள்) பாதுகாப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட திகதியில் இருந்து 90 நாள் காத்திருப்புக் காலம் ஏற்புடையது.
· அதாவது இறப்பு அனுகூலம் (விபத்தொன்றினால் அல்லாத) அல்லது பாரிய நோய்களிற்கான பாதுகாப்பு இவற்றிற்கான கோரிக்கையொன்று காத்திருப்புக் காலத்தின் பின்னரேயே செய்யப்படலாம்.
· காப்புறுதி செயற்பாட்டுக்கு வந்த உடனேயே விபத்து மரண அனுகூலத்திற்கான பாதுகாப்பு கோரிக்கைகள் செய்யப்படலாம்.
முழுமையான விபரங்களுக்கு தயவு செய்து உங்கள் காப்புறுதி ஆவணத்தை பார்க்கவும்.
5. எவ்வளவு காலத்திற்கு எனக்கு பாதுகாப்பு கிடைக்கும்?
இத்திட்டமானது, சான்றிதழ் வலுவுக்கு வந்த திகதியில் இருந்து ஒரு வருட காலத்திற்கு பாதுகாப்பை வழங்கும்.
கட்டணங்கள் மற்றும் அறவீடுகள்
1. இத்திட்டத்திற்கு எனக்கான கட்டுப்பணங்கள் எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது?
இது ஒரு வருடாந்த கட்டுப்பணக் காப்புறுதியாகும், அதாவது உங்கள் பாதுகாப்பிற்காக வருடத்திற்கு ஒரு முறையே கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.
உங்கள் கட்டுப்பணமானது நீங்கள் இத்திட்டத்திற்கு உள் நுழையும் தருணத்தில் உங்கள் தற்போதைய வயதின் அடிப்படையில் தங்கியிருக்கும். உங்கள் வயது அதிகரிக்கும் போது கட்டுப்பணம் உயர்ந்து செல்லலாம்.
2. கோரிக்கைக் கொடுப்பனவொன்று செய்யப்பட்ட பின்னர் எனது காப்புறுதிக்கு என்ன நிகழும்?
கோரிக்கை ஒன்றிற்கான கொடுப்பனவு செய்யப்பட்ட பின்னர் (இறப்பு அனுகூலம் அல்லது பாரிய நோய் பாதுகாப்பு), காப்புறுதியானது தன்னிச்சையாக முடிவுறுத்தப்படும்.
3. எனது கட்டுப்பணத்தை நான் செலுத்துவது எவ்வாறு?
பிக்-மீ விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ளவாறு கொடுப்பனவுகள் பின்வரும் முறைகளில் செலுத்தப் – படலாம்:
அ. கடன் அட்டை (Credit card)
ஆ. பற்று அட்டை (Debit card)
கோரிக்கையொன்றிற்கு விண்ணப்பித்தல்
1. எனக்கு ஏதாவதொன்று நிகழ்ந்தால் யார் கொடுப்பனவை பெறுவார்கள்?
பாரிய நோய்க்கான கோரிக்கையொன்றிற்கு, பாரிய நோயொன்று கண்டறியப்பட்டதும் நாம் ஆயுட்காப்புறுதி செய்யப்பட்டவருக்கு கொடுப்பனவை வழங்குவோம். இறப்பின் போது, கோரிக்கை உங்களால் நியமிக்கப்பட்ட பயனாளிக்கு செலுத்தப்படும். கோரிக்கையாளர் இதுபற்றி செலிங்கோ லைஃப் இற்கு அறியத்தருதல் வேண்டுமென்பதுடன், கோரிக்கைக்கான எழுத்துமூல ஆதாரங்களை சமர்பித்தல் வேண்டும். மேலதிக தகவல்களுக்கு தயவு செய்து காப்புறுதி ஆவணத்தின் பின்னிணைப்பு 1 இனை பார்க்கவும்.
2. பயனாளிகளை எவ்வாறு மாற்றுவது?
நியமனப் படிவம் ஒன்றை பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் தற்போதைய பயனாளியை மாற்றலாம். இப்படிவமானது கீழே தரப்பட்டுள்ள இணைய வழி மூலம் தரவிறக்கம் செய்யப்படலாம். நீங்கள் தனிப்பட்ட முறையில் அருகேயுள்ள செலிங்கோ லைஃப் கிளைக்கு உங்கள் தேசிய அடையாள அட்டையுடன் (காப்புறுதி;தாரின் தே.அ.அட்டை) வருகை தந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கையளிக்க வேண்டப்படுகின்றீர்கள்.
3. எனது பயனாளி பற்றிய எவ்வாறான தகவல்கள் உங்களுக்கு தேவைப்படுகின்றன?
முழுப்பெயர், பிறந்த திகதி, தே.அ.அட்டை இலக்கம், உறவுமுறை, மற்றும் பங்கின் சதவீதம். இத்தகவல்கள் எமக்கு கோரிக்கை செயன்முறையை துல்லியமாக துரிதப்படுத்த உதவும்.
4. கோரிக்கையொன்றை எவ்வாறு சமர்ப்பிப்பது?
கோரிக்கையொன்றை மேற்கொள்ள எமது கோரிக்கை செயன்முறையை பின்பற்றவும். இது தொடர்பான விண்ணப்பங்களை கீழே தரப்பட்டுள்ள
இணையவழி மூலம் தரவிறக்கம் செய்யலாம். தயவு செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகாமையில் உள்ள செலிங்கோ லைஃப் கிளைக்கு கையளிக்கவும்.
5. எனது கோரிக்கையின் நிலையை எவ்வாறு அறிந்து கொள்வது?
கோரிக்கையொன்றை சமர்ப்பித்ததின் பின், வரும் வழிமுறைகள் மூலம் உங்கள் கோரிக்கையின் நிலையினை அறிந்து கொள்ளலாம்:
தொலைபேசி மூலம் : 0112 461 461 மின்னஞ்சல் மூலம் : care@ceylife.lk, service@ceylife.lk
6. செலிங்கோ லைஃப் பிக்-மீ குழுப் பாதுகாப்பு காப்புறுதியின் கீழ் அனுகூலம் ஒன்று மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் உண்டா?
தயவுசெய்து காப்புறுதியின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளை பார்க்கவும்.
முடிவுறுத்தல் மற்றும் இரத்துச் செய்தல்
1. எவ்வாறான சந்தர்பங்களில் எனது காப்புறுதிப் பாதுகாப்பு முடிவுறுத்தப்படும்?
காப்புறுதி செய்யப்பட்ட உறுப்பினரொருவரின் காப்புறுதிப் பாதுகாப்பானது பின்வரும் முதலில் நடைபெறும் நிகழ்வின் போது தன்னிச்சையாக நிறுத்தப்படும்:
அ. காப்புறுதி செய்யப்பட்டரின் இறப்பு அல்லது பாரிய நோயொன்றுக்கான கோரிக்கை இவற்றில் முதலில் நிகழும் சந்தர்ப்பத்தில்.
ஆ. 56 வயதையடையும் போது.
இ. சான்றிதழின் காலாவதித் திகதியில் இருந்து 30 நாட்களிற்குள் மீள்புதுப்பிக்கப்படாவிட்டால்.
ஈ. கம்பனியானது, அடுத்த காப்புறுதி ஆண்டு நிறைவிலிருந்து பாதுகாப்பை இடைநிறைத்த தீர்மானித்தால்.
2. செலிங்கோ லைஃப் இன் காப்புறுதித் திட்டங்கள் பற்றி மேலதிக தகவலகளை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நான் யாரை தொடர்பு கொள்வது?
நாம், உங்களை எமது விற்பனை ஆலோசகர்களுடன் தொடர்பு படுத்த முடியும். எமது இணையத்தளமான https://www.ceylincolife.com/ இனை அழுத்தவும் அல்லது எம்மை 0112 461 461 இல் தொடர்பு கொள்வதன் மூலம் செலிங்கோ லைஃப் இன் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.