அம்பாறை மற்றும் காலி மாவட்டங்களில் புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கற்களை நாட்டியது செலிங்கோ லைஃப்

  • Post author:
  • Post category:Uncategorized
Share On

செலிங்கோ லைஃப் நிறுவனமானது அம்பாறை மற்றும் காலி மாவட்டங்களில் வளங்கள் குறைந்த பாடசாலைகளுக்காக இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைப்பதற்கான நிதியுதவியை வழங்கி வருகிறது. இதன் மூலம், இதுவரை 89 வகுப்பறைகளை கட்டி முடித்துள்ள நிறுவனத்தின் நீண்டகால வகுப்பறை அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடுகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

இதற்கிணங்க அம்பாறையில் அமைந்துள்ள உதயகிரிய வித்யாலயம் மற்றும் காலியில் உள்ள கல்லந்தல கனிஷ்ட வித்யாலயம் ஆகிய பாடசாலைகளில் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதுடன், தற்காலிக கற்றல் இடங்களை மாற்றி, முறையான வசதிகளுடன் கூடிய புதிய வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் இதன் மூலம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது தற்காலிக குடில்கள் மற்றும் தன்னிச்சையாக அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் மீது சார்ந்துள்ள இந்த இரு பாடசாலைகளும், மாணவர்களுக்கு பாதுகாப்பான, நீடித்த மற்றும் ஈர்க்கக்கூடிய கற்றல் சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 20ஒ20 அடி அளவிலான தலா ஒரு வகுப்பறையை பெற உள்ளன.

160 மாணவர்கள் மற்றும் 20 ஊழியர்களைக் கொண்ட உதயகிரிய வித்யாலயத்தில், இந்த புதிய கட்டிடம் 8ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வியை ஆதரிக்கவுள்ளது. அதேபோன்று, 138 மாணவர்கள் மற்றும் 18 ஆசிரியர்கள் உள்ள கல்லந்தல கனிஷ்ட வித்யாலயத்தில், போதிய வசதிகள் இல்லாத சூழலில் கல்வி கற்று வந்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த புதிய வகுப்பறையின் மூலம் பயனை பெற உள்ளனர்.

இந்த இரண்டு திட்டங்களும், திறம்பட கற்பித்தலும் கற்றலும் நடைபெற தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத தொலைதூர பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை மேம்படுத்தும் செலிங்கோ லைஃபின் அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக பிரதிபலிக்கின்றன. நிறுவனத்தின் வகுப்பறை அபிவிருத்தித் திட்டமானது, நாடளாவிய

ரீதியில் பரவியுள்ள தனது வலையமைப்பின் மூலம் அதிக தேவையுள்ளபாடசாலைகளை அடையாளம் கண்டு, உள்ளூர் சமூகங்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு, கட்டுமான பணிகளுக்கு கட்டங்களாக நிதியளித்து, முன்னேற்றத்தை கவனமாக கண்காணிக்கிறது.

கட்டிட நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படும் ஒவ்வொரு வகுப்பறையும் எதிர்கால தலைமுறைகளுக்கும் பயன் அளிக்கும் வகையில், அவற்றின் பராமரிப்பையும் நிறுவனம் தொடர்ந்து மேற்கொள்கிறது.

செலிங்கோ லைஃப் ஆனது 2004 ஆம் ஆண்டு லுணுகம்வெஹேராவில் உள்ள திஸ்ஸ ஆரம்பப் பாடசாலையில் தனது முதலாவது வகுப்பறையை நிர்மாணித்தது தொடக்கம், நாட்டின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு தனது ஆதரவினை வழங்கி வருகிறது. மரங்களின் கீழ், சேதமடைந்த மண்டபங்களில் அல்லது குறுகிய தற்காலிக குடில்களில் கல்வி கற்க வேண்டிய நிலைமையில் இருந்த பிள்ளைகளுக்காக, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வகுப்பறைகளை நிறுவனம்நிர்மாணித்து வழங்கியுள்ளது.

அம்பாறை மற்றும் காலி மாவட்டங்களில் தற்போது நாட்டப்பட்டுள்ள அடிக்கற்கள், கல்வி சூழலை மேம்படுத்தி, மாணவர்கள் கௌரவத்துடனும் நிலைத்தன்மையுடனும்தமது கல்வியைத் தொடர உதவுவதற்கான செலிங்கோ லைஃபின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.

செலிங்கோ லைஃப் நிறுவனம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக சந்தை முன்னணியில் இருந்து வருகிறது. காப்புறுதி பெற்றவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை பாதுகாக்கவும், அபாயங்களை குறைக்கவும் உதவும் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில், டீசயனெ குiயெnஉந அமைப்பின் மதிப்பீட்டின்படி,செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் மிக உயர்ந்த மதிப்புள்ள காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 22-வது மிக பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில், தொடர்ந்து 19-வது தடவையாக ஆண்டின் மக்களுக்கான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர” (“Pநழிடந’ள டுகைந ஐளெரசயnஉந ளுநசஎiஉந Pசழஎனைநச ழக வாந லுநயச”) விருதைப் பெற்றதன் மூலம், மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரியவர்த்தகநாமம் என்ற தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கையின் “ஆண்டுக்கான வர்த்தகநாமம்” என்ற விருதினை பெற்றுள்ள இந்த நிறுவனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ஐஊஊளுடு) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனம் (ஊஐஆயு) ஆகிய அமைப்புகளால் இலங்கையின் மிகவும் பாராட்டப்பட்ட 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.