செலிங்கோ லைஃப்பைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட குழுவொன்று அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஐந்து நாள் பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டது. ‘முன்னோக்கிச்செல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சித்திட்டமானது முகவர் முகாமைத்துவம் (யுபநnஉல ஆயயெபநஅநவெ) குறித்தும், எதிர்காலத்திற்குத் உரிய விற்பனை குழுக்களை உருவாக்கும் வழிகளையும் மையமாகக் கொண்டதாக இருந்தது.
பயிற்சி அமர்வுகள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருந்தன. அதில், இலாபகரமான முகவர் முகாமைத்துவம், திறன் வாய்ந்த முறைமைகள் மூலம் சக்திவாய்ந்த முகவர் வலையமைப்பை உருவாக்குதல், உயர்ந்த சந்தைகளுக்குத் தயாராவது, முகவர்களுக்குள் தலைவர்களை உருவாக்குதல், தொழில்நுட்பத்தைச் சரியாக ஏற்றுக்கொள்ளும் தலைமைத்துவத்தின் அதிகரித்த முக்கியத்துவம், மேலும் மில்லியன் டொலர் வட்ட மேசை (ஆனுசுவு) மனப்பாங்கை வளர்த்தெடுத்தல் போன்றவை அடங்கும்.
இந்த பயிற்சி அமர்வுகளை மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள கிரேட் ஈஸ்டர்ன் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் எட்டு திறமையான குழு விற்பனை முகாமையாளர்கள் நடத்தினர். அவர்களை காப்புறுதித் துறையில் நீண்ட கால அனுபவம் பெற்ற திரு. கே. ஹரிதாஸ் வழிநடத்தினார். அத்துடன், பங்கேற்பாளர்கள் மலேசியாவின் கிரேட் ஈஸ்டர்ன் லைஃப் மற்றும் எம்சிஐஎஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சிறப்பாக செயல்படும் குழு விற்பனை முகாமையாளர்களின் அலுவலகங்களையும் பார்வையிட்டனர். அங்கு, வெற்றிகரமாக செயல்படும் முகவர் நிறுவனங்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதை அவர்கள் நேரடியாகக் கற்றுக்கொண்டனர்.
இந்த முயற்சி, தனது குழுவின் தொழில்முறை திறன்களையும் தலைமைத்துவ திறன்களையும் மேம்படுத்துவதற்கான செலிங்கோ லைஃப்பின் தொடர்ச்சியான உறுதியை பிரதிபலிக்கிறது, இதன் மூலம் காப்புறுதியாளர்களுக்கு சிறப்பாக சேவை செய்வதே குறிக்கோள் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கு படத்தில் காணப்படுபவர்கள், திரு. ஹரிதாஸ் மற்றும் கிரேட் ஈஸ்டர்ன் லைஃப் நிறுவனத்தின் பிரதிநிதியுடன் செலிங்கோ லைஃப் குழுவின் உறுப்பினர்கள்.