You are currently viewing செலிங்கோ லைஃப், அடுத்த தலைமுறையை வலுப்படுத்தும் நோக்கில், ரூ. 18 மில்லியன் பெறுமதியான ‘பிரணாம’ புலமைப்பரிசிலை வழங்கிய
2023 கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் (பு.ஊ.நு. யுனஎயnஉநன டுநஎநட) பெற்ற சிறப்பான சித்திகளுக்காக செலிங்கோ லைஃப் பிரணமா கல்வி உதவித்தொகைகளை பெற்ற மாணவர்கள்.

செலிங்கோ லைஃப், அடுத்த தலைமுறையை வலுப்படுத்தும் நோக்கில், ரூ. 18 மில்லியன் பெறுமதியான ‘பிரணாம’ புலமைப்பரிசிலை வழங்கிய

  • Post author:
  • Post category:Uncategorized
Share On

செலிங்கோ லைஃப் நிறுவனமானது அண்மையில் 128 திறமையான இளம் மாணவர்களை அவர்களின் கல்விப் பயணத்தில் ஊக்குவிக்கும் வகையில் பிரணாம புலமைப்பரிசில் தொகையை வழங்கியது. எதிர்கால தலைவர்களை உருவாக்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் அடையாளமாக திகழும் இந்த நிகழ்வின் இந்த ஆண்டுக்கான 24வது பதிப்பில், இந்த புலமைப்பரிசில் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த பிரணாம புலமைப்பரிசில் கல்வி பரிசில்தொகை வழங்கும் நிகழ்வானது, 2002ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிலையில் அன்றிலிருந்து அண்மையில் நடந்த இவ்வாண்டிற்கான பதிப்பு வரையில் வழங்கப்பட்ட மொத்த புலமைப்பரிசில் தொகைகளின் எண்ணிக்கை 3,466 ஆகும். அத்துடன் இதன் மொத்த பெறுமதி ரூ.240 மில்லியன் ஆகும். சமீபத்திய நிகழ்த்தில் மட்டும் ரூ.18 மில்லியன் நான்கு நிலைகளில் வழங்கப்பட்டது. தேசிய மட்டத்தில் சிறப்பான சித்தி, மாவட்ட மட்ட தரவரிசை, மேலும் விளையாட்டு, கலை மற்றும் பிற படைப்பாற்றல் துறைகளில் அபூர்வ சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த புலமைப்பரிசில்; தொகைகள் வழங்கப்பட்டன.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுனில் ஷாந்தா அவர்கள், தனது பிரதான உரையில், செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பிரணாம புலமைப்பரிசில் தொகை திட்டத்துடன் இணைந்த 24 ஆண்டுகால பயணத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்தத் திட்டம் ஏற்கனவே இலங்கையிலும் வெளிநாடுகளிலும் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி வரும் தலைவர்களை உருவாக்க உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கல்வி என்பது திருட முடியாத ஒரே செல்வமாகும்; அது அறிவு மற்றும் திறன்களை வழங்கி, தொழில் வாய்ப்புகளைத் திறந்து வைக்கிறது, தீர்மானிக்கும் திறனை வலுப்படுத்துகிறது, அபாயங்களை ஏற்கும்

நம்பிக்கையை உருவாக்குகிறது, மேலும் தனிநபர் மற்றும் சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கிறது என அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும், தெரிவிக்கையில் ‘கல்வி என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கும் வறுமை ஒழிப்பிற்கும், நாடுகள் முன்னேற தேவையான சிக்கல் தீர்க்கும் திறனையும் தழுவி முன்னேறும் பண்பையும் வளர்க்கும் அடிப்படையாகவும் விளங்குகிறது” எனக் கூறினார்.

புதிய புலமைப்பரிசில் உதவித்தொகை பெறுபவர்களை வரவேற்ற செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் பிரதி பிரதான நிறைவேற்று அதிகாரியுமான திரு ரங்க அபேநாயக்க அவர்கள், முன்னைய ஆண்டுகளவில் பிரணாம புலமை பரிசில் பெற்றவர்ள் சாதனைகள் குறித்து பெருமை கொள்வதாகக் கூறினார். அவர்களில் பலர் இன்று மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் முனைவோராக உள்ளனர்.தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உலகம் வேகமாக மாறிவருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை உறுதிசெய்யும் நிலையில், இலங்கையை உலகத் தொழில்நுட்ப தரத்திற்கு உயர்த்த வேண்டியது இளம் கல்வியாளர்களின் பொறுப்பு என்று குறிப்பிட்டார். ‘புதிய பாதைகளை உருவாக்கத் துடிக்கும், வேறுபட்ட முறையில் சிந்திக்கும் படைப்பாற்றலான மற்றும் புதுமையான சிந்தனைகள் எமக்கு தேவை,” என்று அவர் வலியுறுத்தினார். ‘அந்த சவாலையே இன்றைய பிரணாம புலமை பரிசில் பெறுநர்களுக்கு நாம் முன்வைக்கிறோம்” என்றும் தெரிவித்தார்

இந்த நிகழ்வுக்கு தனிப்பட்ட உணர்வுபூர்வமான பரிமாணத்தைச் சேர்க்கும் வகையில் கடந்த கால கல்வி புலமை பரிசில் பெறுநரான திரு சஹன் கரவித, தற்போது அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் கோட்பாட்டு இயற்பியலில் முனைவர் பட்டம் (Phனு) மேற்கொண்டு வரும் நிலையில் அவர் ஒன்னலன் முறையில் உரையாற்றினார்.அவரது கல்விப்பயணமானது செலிங்கோ லைஃப் பிரணாம கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் நீண்டகால தாக்கத்தையும் அதன் பயனாளிகள் உலகளவில் பிரகாசிக்கக் கூடிய திறனையும் பிரதிபலிக்கிறது.

செலிங்கோ லைஃப் நிறுவனம், பிரணாம புலமைப்பரிசில்களை 2024 ஆம் ஆண்டில் 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தி 26 மாணவர்களுக்கும், 2023 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் (பு.ஊ.நு. ழுசனiயெசல டுநஎநட) சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற 25 மாணவர்களுக்கும், மேலும் 2023 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பொதுப்

பரீட்சையில் (பு.ஊ.நு. யுனஎயnஉநன டுநஎநட) தமது மாவட்டங்களில் மிக உயர்ந்த மதிப்பெண் பெற்ற 67 மாணவர்களுக்கும் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் விளையாட்டு, கலை, நாடகம், புத்தாக்கம் அல்லது படைப்பாற்றல் துறைகளில் சிறந்து விளங்கிய இளம்மாணவர்களுக்கு 10 தகுதிகாண் விருதுகளும் வழங்கப்பட்டன.

அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன. 2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக வாக்களித்தது, தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ‘ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக” தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ஐஊஊளுடு) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (ஊஐஆயு) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் ‘இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம்” என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.