கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக, ‘செலிங்கோ லைஃப்பின் குடும்ப சவாரி” என்பது பல இலங்கையர்களுக்கு கேள்விப்பட்டதே தவிர அனுபவிக்க முடியாத கனவு விடுமுறை அனுபவமாகவும் நிறுவனத்தின் விசுவாசமான காப்புறுதிதாரர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட ஒரு சிறப்பான நன்மையாகவும் திகழ்ந்தது. ஆனால் தற்போது இந்நிலையை மாற்றியமைக்கப்போவதாக ஆயுள் காப்புறுதித்துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் செலிங்கோ லைஃப் தெரிவித்துள்ளது: இதற்கிணங்க ‘பாதணிகளை இறுக்கமாக அணிந்து உள்நுழைந்து மகிழ்ச்சி களியாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்!”என அழைப்பு விடுகிறது.
செலிங்கோ லைஃப் நிறுவனமானது தற்போது ~சவாரிக்கு விரையுங்கள்| (சுரn கழச ளுயஎயசi) என்ற புதிய இணையவழியிலான விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இலங்கையில் உள்ள ஸ்மார்ட்போன் அல்லது கணினி வைத்திருக்கும் எவரும், புகழ்பெற்ற ‘குடும்ப சவாரி” நிகழச்சியை அனுபவிக்கவும், இரண்டு பேருக்கான மலேசியாவுக்குச் சென்று முழுமையாகப் பணம் செலுத்தப்பட்ட சுற்றுலாவை வெல்லவும் போட்டியிட முடியும்.
விளையாட்டில் பங்குபற்றுவதற்கான நடைமுறை மிகவும் இலகுவானதாகும்: விளையாடுங்கள், புள்ளிகளை சேர்த்துக்கொள்ளுங்கள், பின்னர் மதிப்பெண் பட்டியலில் மேலேறுங்கள் – இதன்பின்னர் வெற்றியாளராக தெரிவு செய்யப்படின் தனது பயணப்பைகளை கோலாலம்பூரிற்கு செல்வதற்கு தயார்படுத்த முடியும்.
2025 டிசம்பர் 31 அன்று அதிக மதிப்பெண் பெற்றவர் மலேசிய விடுமுறையை வெல்ல முடியும். மேலும், முதல் 100 உயர்ந்த மதிப்பெண் பெற்றவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நான்கு பேருக்கு இலங்கையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் ஒரு இரவு தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு வாரமும் ஆறுதல் பரிசாக வாராந்த வெற்றியாளர்கள் தலா ரூ.10,000 பெறுமதியான சூப்பர் மார்க்கெட் வவுச்சர்களைப் பெறுவார்கள். இவ்வாறு மொத்தம் 12 பரிசுகள் 2025 டிசம்பர் 31 வரை வழங்கப்படவுள்ளன.
குடும்ப சவாரி அனுபவத்தில் பங்கேற்க விரும்புவோர், செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் குயஉநடிழழம அல்லது ஐளெவயபசயஅ பக்கங்களுக்கு சென்று சுரn கழச ளுயஎயசi இணைப்பை கிளிக் செய்ய வேண்டும் – இது இலவசமாக திகழ்வதுடன், மற்றும் சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்குவதுடன் மேலும் அனைவருக்கும் திறந்துள்ளது. அவர்கள் காப்புறுதிதாரர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தற்போது அவர்கள் குடும்ப சவாரி கதையின் ஒரு பகுதியாக ‘விரைந்தோடி” சேரும் வாய்ப்பு இதுவே.
செலிங்கோ லைஃப்பின் பணிப்பாளர்ஃபிரதம செயற்பாட்டு அதிகாரி திரு சமித ஹேமச்சந்திர தெரிவிக்கையில், ‘இந்த முயற்சியானது நிறுவனத்தின் மிகவும் மதிப்புமிக்க வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஒரு புதிய, மகிழ்ச்சிகரமான அத்தியாயத்தை சேர்க்கிறது”. மேலும் அவர் தெரிவிக்கையில்: ‘குடும்ப சவாரி என்றால் எப்போதுமே மக்களை ஒருங்கிணைத்து, பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களின் மூலம் உறவை வலுப்படுத்துவதாகும். சவாரிக்காக விரையுங்கள் மூலம், அந்த மகிழ்ச்சியை இன்னும் பரந்த மக்களிடம் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறோம். செலிங்கோ லைஃப்பில் காப்புறுதிதாரர்களாக இல்லாதவர்களும் கூட, இந்த உற்சாகமான நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.”
பல வருடங்களாக ‘செலிங்கோ லைஃப்பின் குடும்ப சவாரியானது” உலகம் முழுவதும் – அவுஸ் திரேலியாவிலிருந்து ஜப்பான் வரை, இத்தாலியிலிருந்து சீனா வரை, மலேசியாவின் வெயில் பளபளக்கும் கடற்கரைகளிலிருந்து ‘பெர்ல் பே”யின் களிப்பூட்டும் நீச்சல் சறுக்குகள்வரை, 11,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு (மொத்தம் 37,000 பேர்) சுற்றுலா பரிசில்களை வழங்கி மறக்க முடியாத அனுபவங்களை அவர்களுக்கு அளித்துள்ளது.இந்த ஆண்டு 19வது பதிப்பை எட்டியுள்ள இந்த ஊக்குவிப்பு பிரசாரமானது, அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்று பீஜிங், மலேசியா மற்றும் பண்டாரகமவில் உள்ள ‘பேர்ல் பே நீர் பூங்கா” சுற்றுலாக்களுடன் தொடர்கிறது. அத்துடன் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான சுற்றுலா ஒன்றுகூடலை வழங்கும் ஒரே வர்த்தகநாமமாக செலிங்கோ லைஃப் நிறுவனம் நிலைநிறுத்தி வருகிறது.