இலங்கையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டமானது மீண்டும் இம்முறையும் இடம்பெறவுள்ளது. செலிங்கோ லைஃப் நிறுவனமானது பாரியதும் மற்றும் மகிழ்ச்சியும் நிறைந்ததுமான அதன் புகழ்பெற்ற ‘குடும்ப சவாரி” பாரிய ஊக்குவிப்புத் திட்டத்தின் 19 வது பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த பாரிய ஊக்குவிப்பு திட்டமானது நூற்றுக்கணக்கான அதிர்ஷ்டசாலிகளாக தெரிவு செய்து காப்புறுதிதாரர் குடும்பங்களுக்கு வெளிநாடு வாடிக்கையாளர்களை களிலும் மற்றும் உள்நாட்டிலும் மறக்க முடியாத பயணங்களை உறுதியளிக்கிறது.
செலிங்கோ லைஃப்பின் குடும்ப சவாரி ஊக்குவிப்பு திட்டமானது சுமார் இரண்டு தசாப்தங்களாக, இல்லங்களின் புகழ்ப்பெற்ற நாமமாக மாறியுள்ளது, இது 11,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் 37,000 அங்கத்தவர்களுக்கு வழக்கமான வெகுமதிகளுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களுடன் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதன் 19வது ஆண்டில், 2026 ஆம் ஆண்டிற்கான இலக்குகள் அறிவிக்கப்பட்டதன் மூலம் மீண்டும் உற்சாகமான பாதையில் பயணிக்கிறது.
குடும்ப சவாரி 19இன் சிறப்பம்சமாக வெற்றி பெறும் 5 குடும்பங்களின் 20 பேருக்கு நிறுவனத்தின் பூரண செலவில் சீனாவின் பீய்ஜிங்கிற்கு விடுமுறையை கழிப்பதற்கான அதிர்ஷ்ட வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் இவர்கள் பீஜிங் நகரத்தின் வளமான கலாசாரம் மற்றும் உலகப் புகழ்பெற்ற இடங்களை கண்டு களிக்க முடியும். மேலும் 10 குடும்பங்களினை சேர்ந்த மொத்தம் 40 பேருக்கு மலேசியாவிற்கு செல்லும் அற்புத வாய்ப்பு வழங்கப்படும்.அதே வேளை 250 குடும்பங்கள், அல்லது 1,000 பேர் பண்டாரகமவில் உள்ள பேர்ல்பே நீர் பூங்காவில் ஒரு நாள் வேடிக்கை விநோத களியாட்ட நிகழ்வுகளை அனுபவிக்க முடியும்.
டிசம்பர் 31, 2025 வரை இந்த ஊக்குவிப்பு திட்டமானது அமுலில் உள்ளதுடன் இதனை தொடர்ந்து ஜனவரி 2026 இல் நடைபெறவுள்ள பாரிய சீட்டிழுப்பு குலுக்கலில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
‘குடும்ப சவாரி என்பது வெறுமனே பயணம் பற்றியது மட்டுமல்ல – குடும்பங்கள் நெருக்கமாகி, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகளை உருவாக்கும் அனுபவங்களைப் பற்றியதாகும்.” என்று செலிங்கோ லைஃப் பணிப்பாளரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான திரு.சமித ஹேமச்சந்திர கூறினார். ‘இந்த ஆண்டும், வெற்றி பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏதோ ஒரு மாயாஜாலம் காத்திருக்கிறது. தமது வாழ்க்கை இலக்குகாக எம்மை நம்பிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கும், நாம் அவர்களுக்கு வழங்கும் பயணங்கள் அவர்களை நாம் கொண்டாடும் ஒரு வாய்ப்பாக உணர்கிறோம்.”
குடும்ப சவாரி குலுக்கல் சீட்டிழுப்புக்கு தகுதி பெறுவதற்கு, ஏற்கனவே உள்ள காப்புறுதிதாரர்கள் தமது காப்புறுதி திட்டங்கள் அல்லது ஓய்வூதியத் திட்டங்களில் தேவையான குறைந்தபட்ச நிலுவைகளை ஊக்குவிப்பு காலத்தில் பராமரிக்க வேண்டும். இதேவேளை செப்டெம்பர் 1 முதல் டிசம்பர் 31, 2025 வரை ஆயுள் காப்புறுதியில் உள்நுழையும் புதிய வாடிக்கையாளர்கள் இந்த ஊக்குவிப்பு காலத்தில் மூன்று மாதாந்த கட்டணங்களைச் செலுத்துவதன் மூலமும் இந்த சீட்டிழுப்பில் பங்குப்பெற்ற முடியும். ஊநலடகைந டிஜிட்டல் செயலியை பதிவிறக்கம் செய்தும், தொடர்ச்சியான கட்டண முறை மூலம் காப்புறுதி தொகையை செலுத்தும் காப்புறுதிதாரர்களுக்கு மேலதிக வாய்ப்புகள் வழங்கப்படும், அதே வேளை நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு மேலதிக வாய்ப்புகள் உள்ளது.
பல ஆண்டுகளாக, குடும்ப சவாரி வெற்றியாளர்கள் அவுஸ்திரேலியா, இத்தாலி, இங்கிலாந்து, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் துருக்கி போன்ற தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்யும் அதிர்ஷ்ட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமது தாயகத்திற்கு அருகில் அமைந்துள்ள சீனா, துபாய், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் சாகசங்களை அனுபவித்துள்ளனர். மேலும், பிரபல வர்த்தகநாம தூதுவர்களான ரோஷன் ரணவன,அவரது மனைவி குஷ்லானி மற்றும் மகன் மின்னெத் ஆகியோர் மீண்டும் ஒருமுறை வெற்றியாளர்களுடன் இப்பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர். இது குடும்ப சவாரி 19 ஐ இன்னும் மறக்க முடியாததாக மாற்றுகிறது.
அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன. 2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக வாக்களித்தது, தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ‘ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக” தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ஐஊஊளுடு) இல் பட்டய
மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (ஊஐஆயு) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் ‘இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம்” என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.