இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் மறுக்கமுடியாத சந்தைத் தலைவராக திகழும் செலிங்கோ லைஃப் நிறுவனமானது, இந்த ஆண்டு அதன் சாதனையை சாகசமாக மாற்றியுள்ளது. இதற்கிணங்க 2024 ஆம் ஆண்டில் அதன் சிறந்த விற்பனையாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மலேசியா, துபாய் மற்றும் துருக்கிக்கு மறக்க முடியாத வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை வழங்கியது.
மார்ச் 2025 இல் நிறுவனத்தின் வருடாந்த விருது வழங்கும் விழாவில் வெற்றியாளர்களுக்கான வெளிநாட்டு சுற்றுலாக்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. இதற்கிணங்க உலகப் புகழ்பெற்ற 3 இடங்களுக்கு அனைத்து செலவுகளும் நிறுவனத்தினால் பொறுப்பேற்கப்பட்ட நிலையில் ஒய்வு விடுமுறையை கழிப்பதற்கான சுற்றுலா வெகுமதி தொடர்பாக நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டது.
மலேசியாவிற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதற்கு 16 சாதனையாளர்கள் தகுதி பெற்றனர், இதில் ஆறு பேருக்கு, இரண்டு இரவுகளுடன், இது மூன்று நாள் சுற்றுலாவாக அமைந்தது. அவற்றில் அழகிய கோலாலம்பூர் இரட்டை கோபுரங்கள், மாயாஜாலம் மிகுந்த பட்டு குகைகள் மற்றும் ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் போன்றவற்றின் சாதனையாளர்கள் கன்டு கனிக்ககூடியதாக அமைந்திருந்தன.
பன்னிரண்டு விற்பனை சாதனையாளர்கள் துபாய்க்கு சுற்றுலா செல்லும் அதிர்ஷ்ட வாய்ப்பினை பெற்றனர். இதில் ஆறு பேருக்கு, இரண்டு இரவுகளுடன், மூன்று நாள் சுற்றுலாவாக இது அமைந்தது. அதில் உலகின் மிக உயரமான கோபுரமான புர்ஜ் கலீஃபாவைப் பார்வையிடுவதும், நகர சுற்றுப்பயணம் மற்றும் நவீன அற்புதங்கள் மற்றும் அரேபிய வசீகரத்தின் தவிர்க்க முடியாத மெரினா இரவு விருந்துபசார பயணமும் அடங்கும்.
துருக்கிக்கான சுற்றுப்பயணமானது மனதை மயக்கும் அம்சங்கள் நிறைந்ததாக அமைந்தது. 20 சாதனையாளர்கள் இதற்கு தகுதி பெற்றதுடன், 12 பேருக்கு நான்கு இரவுகள் மற்றும் ஐந்து பகல்களை கொண்டதாக இதில் பயனம் அமைந்தது. அவர்கள் இஸ்தான்புல்லின் பிரமாண்டத்தில் மூழ்கியதுடன் ஹாகியா சோபியா மற்றும் ப்ளூ மசூதி முதல் வரலாற்று சிறப்புமிக்க கலாட்டா கோபுரம் மற்றும் டோப்காபி அரண்மனை ஆகியவற்றை கண்டு இரசித்தனர்.
பயணம் செய்ய முடியாதவர்களுக்கு அதற்கு ஈடான பெறுமதியான பணம் வெகுமதியாக வழங்கப்பட்டது. இதனால் யாரும் அங்கீகாரத்தை இழக்கவில்லை என்பதை உறுதி செய்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக வாக்களித்தது, தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ‘ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக” தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ஐஊஊளுடு) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (ஊஐஆயு) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் ‘இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம்” என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.
செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 21 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.