You are currently viewing 2025 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு விருதுகளில் சிறந்த விற்பனையாளர்களை கௌரவித்த செலிங்கோ லைஃப்
செலிங்கோ லைஃப்பின் சிறந்த கிளைத் தலைவர் திரு. கே. பகீரதன் (இடமிருந்து இரண்டாவது) நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்களுடன், அரையாண்டு விருதுகள் வழங்கும் விழாவில் காட்சியளிக்கிறார்.

2025 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு விருதுகளில் சிறந்த விற்பனையாளர்களை கௌரவித்த செலிங்கோ லைஃப்

  • Post author:
  • Post category:Uncategorized
Share On

செலிங்கோ லைஃப் நிறுவனமானது அண்மையில் ஷங்க்ரி-லா ஹம்பாந்தோட்டையில் ‘குறிக்கோள்;;-சிறப்பை நோக்கி உயர்தல்” எனும் கருப்பொருளில் நடத்திய 2025 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு விருது வழங்கும் நிகழ்வில் தனது விற்பனை அணியில் சிறப்பாக பணியாற்றியவர்களை ஒன்றிணைத்து அவர்களை கௌரவித்தது.

இந்தக் கொண்டாட்டத்தில், வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சிறப்பாகச் செயல்பட்ட 215 விற்பனை அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர், மேலும் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்தினர் உட்பட மொத்தம் 300 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக, உல்லாச விடுதியில் இலவசமாக இரவு தங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டமையானது நிகழ்வின் கொண்டாட்ட சூழலை மேம்படுத்தியது.

இந்த மாலைப் பொழுது நிகழ்வில் செலிங்கோ லைஃப்பின் தலைவர் திரு. ஆர். ரெங்கநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தார்.

சிறந்த கிளைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வட பிராந்தியத்தைச் சேர்ந்த திரு.கே.பகீரதன்; சிறந்த பிரிவுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வட பிராந்தியத்தைச் சேர்ந்த திருமதி.எஸ்.ராகினி; சிறந்த ஆயுள் காப்புறுதி ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த திரு.ஏ.ஐ. பி.மஞ்சுள சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளராக அங்கீகரிக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி.ஜே.மீரா ஆகியோர் கௌரவிக்கப்பட்ட சிறந்த சாதனையாளர்களில் அடங்குவர்.

செலிங்கோ லைஃப்பின் வருடாந்த நாட்காட்டியில், அரையாண்டு விருது வழங்கும் விழாவானது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிகழ்வானது விற்பனை அணியினரின் சாதனைகளைக் கொண்டாடவும்,

ஆண்டு இறுதியை நோக்கி அவர்கள் முன்னேறும்போது இன்னும் சாதனை இலக்குகளை அடைவதற்காக அவர்களை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக வாக்களித்தது, தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ‘ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக” தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ஐஊஊளுடு) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (ஊஐஆயு) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் ‘இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம்” என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.

செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 21 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.