You are currently viewing 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் செலிங்கோ லைஃப் 6 ‘வைத்ய ஹமுவ” இலவச சுகாதார முகாம்களை நிறைவு செய்துள்ளது

2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் செலிங்கோ லைஃப் 6 ‘வைத்ய ஹமுவ” இலவச சுகாதார முகாம்களை நிறைவு செய்துள்ளது

Share On

இலங்கையின் ஆயுள் காப்புறுதி சந்தையில் முன்னணியில் திகழும் செலிங்கோ லைஃப் நிறுவனமானது, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதன் முதன்மையான ‘வைத்ய ஹமுவ” (மருத்துவரைச் சந்திக்கவும்) சமூக சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஆறு இலவச சுகாதார முகாம்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நிறுவனமானது இத்திட்டத்தின் மூலம் பின்தங்கிய பகுதிகளில் பொது சுகாதார நிலமைகளை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் நீண்டகால உறுதிப்பாட்டைத் தொடர்கிறது.

வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சுகாதார திட்டத்தின் மூலம், நெல்லியடி, சுழிபுரம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டதுடன் பின்னர் கெப்பித்திகொல்லேவ, பெலியத்த மற்றும் தெனியாய ஆகிய இடங்களில் நடைபெற்றன, இந்த சுகாதார முகாம்கள் மூலம் அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கான வசதிகளை குறைவாக எதிர்கொள்ளும் 1,200 க்கும் மேற்பட்ட நபர்கள் பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.

~வைத்ய ஹமுவ| சுகாதார முகாம்கள், முதன்மையாக தொற்றா நோய்களை (NCDs) முன்கூட்டியே கண்டறிவதை நோக்கமாகக் கொண்ட விரிவான பரிசோதனை மற்றும் நோயறிதல் சேவைகளை வழங்குகின்றன. பங்கேற்பாளர்கள் சீரற்ற மற்றும் அதிகாலை உணவுக்கு முன்னான இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம், எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG). உடனடி கொழுப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) பரிசோதனைக்கான சிறுநீர் பரிசோதனைகள் உள்ளிட்ட சோதனைகளைப் பெற்றுக்கொண்டனர். உடல் நிறை குறியீட்டெண் (BMI) அளவீடுகள் மற்றும் கண் பார்வைக்கான சோதனைகளும் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு,

செலிங்கோ லைஃப் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹீமோகுளோபின் பரிசோதனையை அறிமுகப்படுத்தியது, இது இரத்த சோகை மற்றும் பிற நிலைமைகள் தொடர்பான மேலதிக சுகாதாரநிலைமைகளை அடையாளம் காண உதவுகிறது.

ஒவ்வொரு முகாமிலும் தகுதிவாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செலிங்கோ லைஃப் கிளை ஊழியர்கள் மற்றும் பிராசசார ஊழியர்களை உள்ளடக்கிய மருத்துவ சேவைக்கான ஆதரவு குழுவினர் இணைந்து சேவைகளை திறம்பட வழங்கினர். பரிசோதனைகளைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் தங்கள் பரிசோதனை முடிவுகளை பெறவும் அவை தொடர்பாக மருத்துவர்களுடன் நேரடியாகப் விவாதிக்கவும், தேவையான இடங்களில் மருந்துகளைப் பெறவும், நாள்பட்ட நோய்களைத் தடுக்க அல்லது நிர்வகிக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பது குறித்த தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலைப் பெறவும் முடிந்தது.

நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், மூச்சுக்குழாய் ஆஸ்துமா, பூஞ்சை தொற்றுகள், டிஸ்லிபிடீமியா மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பல முன்னர் கண்டறியப்படாத நிலைமைகளை மருத்துவக் குழுக்கள் அடையாளம் கண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பொது சுகாதாரப் பராமரிப்புக்கான நீண்ட காத்திருப்பு காலங்களும், தனியார் பராமரிப்புக்கான அதிக செலவும் சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு தடைகளை ஏற்படுத்தும் நேரத்தில், இதுபோன்ற சமூக அடிப்படையிலான திட்டங்கள் வகிக்கும் முக்கிய பங்கை இந்தநோயறிதல் பரிசோதனைகள் எடுத்துக்காட்டுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

செலிங்கோ லைஃப் நிறுவனமானது இந்த ஆண்டும் ஒரு புதுமையான முயற்சியாக, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் காய்கறி விதைப் பொட்டலங்களை விநியோகித்ததன் மூலம் கிராமப்புற சமூகங்களில் உள்ள குடும்பங்கள் வீட்டுத் தோட்டங்களில் ஈடுபடுவதை ஊக்குவித்தது. இந்த அணுகுமுறையானது சிறந்த ஊட்டச்சத்து, தன்னிறைவு மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செலிங்கோ லைஃப்பின் ‘வைத்ய ஹமுவ” முயற்சி இரண்டு தசாப்த கால வரலாற்றைக் கொண்டுள்ளதுடன் நிறுவனமானது இதன் மூலம் இலங்கை முழுவதும் 150,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு சுகாதார பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக வழங்கியுள்ளது. அவசர பொது சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் சமூகங்கள் தங்கள் நல்வாழ்வைப் பொறுப்பேற்க அதிகாரம் அளிப்பதற்கும் நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளில் இந்தத் திட்டம் ஒரு முக்கிய தூணாக திகழ்கிறது.

2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக வாக்களித்தது, தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ‘ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக” தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் ‘இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம்” என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.

செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 21 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.