மெடிகல் சேவர்
அனைத்து மருத்துவ காப்புறுதிகளும் 70 வயதில் நிறுத்தப்படும் போது செலிங்கோ லைஃப் மெடிக்கல் சேவர் தொடர்ந்தும் உங்களை பாதுகாக்கின்றது!
செலிங்கோ லைஃப் வழங்கிடும் மெடிக்கல் சேவர் ஆனது ஓர் விரிவான மருத்துவ காப்புறுதித் திட்டம் ஆகும். இது உங்கள் தற்போதைய மருத்துவம் சார்ந்த செலவுகளை மீளப் பெற்றுக் கொள்ள உதவுகிறது. அத்தோடு உங்கள் காப்புறுதி காலம் வரையில் உங்களுக்கான பாதுகாப்பையும் அளிக்கிறது. அதே வேளை காப்புறுதி முதிரவின் போது உங்கள் எதிர்கால மருத்துவ செலவுகளை செய்துகொள்ளும் வகையில் மிகவும் உறுதியான மருத்துவ நிதி ஒன்றினை உருவாக்கிக் கொள்ளவும் உதவுகிறது. இந்த முழுமையான மருத்துவ மற்றும் ஆயுட் காப்புறுதித் திட்டமானது உங்கள் அவசர மருத்துவ செலவுகளை ஈடு செய்வதுடன் எதிர்கால மருத்துவ செலவுகளுக்கான ஓர் முதலீடாகவும் விளங்குகிறது. உங்களதும் உங்கள் குடும்பத்தினதும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துகிறது.
எவ்வாறு செயற்படுகின்றது
செலிங்கோ லைஃப் ‘மெடிக்கல் சேவர்’ தற்போதும் மற்றும் காப்புறுதி முதிர்வின் பின்னரும் உங்கள் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் முதலாவது மருத்துவக் காப்புறுதி திட்டமாகும். மெடிக்கல் சேவர் திட்டம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
- காப்புறுதி காலத்தின் போது உங்களின் தற்போதைய மருத்துவ செலவுகளை மீளச் செலுத்துதல்.
- காப்புறுதி காலம் முழுவதும் வாழ்க்கைக்கான பாதுகாப்பை வழங்குதல் மற்றும் காப்புறுதி முதிர்வின் பின்னர் உங்கள் எதிர்கால மருத்துவச் செலவுகளைப் பூர்த்தி செய்ய வலுவான மருத்துவ நிதியை உருவாக்க உங்களுக்கு உதவுதல்.
- உங்கள் ஓய்வு காலத்தில் மருத்துவத் தேவைகளுக்கான உடல்நலக் காப்பீடாகச் செயல்படுதல்.
அனுகூலங்கள்
வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும்போது, மருத்துவச் செலவுகள் அதிகரிப்பது எப்போதும் ஒரு தொடர்ச்சியான கவலையாகவே இருக்கும். மெடிக்கல் சேவர் மூலம், குறைந்தபட்சம் மாதந்தம் ரூ. 5000 தொடக்கம் கட்டுப்பணத்தை செலுத்தி சேமிக்கலாம். காப்புறுதி முதிர்வுக்குப் பின்னர், நீண்ட கால மருத்துவம் மற்றும் மருத்துவ பராமரிப்புக்காக ஒரு காப்புறுதி மருத்துவ நிதியை உருவாக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டுப்பணம் செலுத்தும் காலத்திற்கு மாதாந்த, காலாண்டு, இருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை பங்களிப்பது மற்றும் உங்கள் நிதியின் வளர்ச்சியை பேணுதல், காப்புறுதி காலத்தின் போது நிதியின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக, நீங்கள் கூடுதல் பணத்தை செலுத்தும் போதெல்லாம் மெடிக்கல் சேவர் நிதியை டாப்-அப் செய்யலாம்.
மெடிக்கல் சேவர் திட்டத்தின் முதிர்வு அனுகூலத்தை நன்கு புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
- காப்புறுதிதார்ரின் வயது: 45 வருடங்கள்
- காப்புறுதி காலம்: 20 வருடங்கள்
- கட்டுப்பணம் செலுத்தும் முறை: மாதாந்தம்
இந்த அட்டவணையில், காப்புறுதி காலத்தின் போது நிதி மீளப்பெறுகைகள் ஏதும் நடைபெறாத பட்சத்தில் நிதி பங்களிப்புகளுக்கான 20 ஆண்டுகளின் முடிவில் கிடைக்கப்பெறும் முதிர்வத் தொகை அனுகூலத்தை காணலாம்.
Header Col 3 |
Header Col 3 |
|
---|---|---|
Column 1
|
Column 2
|
Column 3
|
Column 1
|
Column 2
|
Column 3
|
மருத்துவ நிதிக்கான மாதாந்த பங்களிப்பு (ரூ.) Fund (Rs.) | 20 வருடங்களுக்கான முழு பங்களிப்பு (ரூ) | 20 வருடங்களின் முடிவில் விளக்கப்பட்ட நன்மை | ||
4% | 8% | 12% | ||
15,000 | 3,600,000 | 6,304,952 | 9,564,753 | 14,879,721 |
35,000 | 8,400,000 | 14,452,716 | 21,945,957 | 34,171,378 |
75,000 | 18,000,000 | 30,748,245 | 46,708,364 | 72,754,692 |
Above is only an example based on assumed dividend rates of 4% p.a, 8% p.a. and 12% p.a., after all management charges and assuming all premiums are paid on the respective due dates. This is only an illustration of the likely maturity benefit and the actual returns may vary as per the monthly declared dividend rates by the company, the dates of payment of premiums and any withdrawals made by the customer during the term of the policy.
தனித்துவமான முதிர்வு தீர்வு தெரிவுகள் (லைஃப்லைன் / மாதாந்த செலுத்துகை)
உங்கள் மெடிக்கல் சேவர் நிதியின் முதிர்வுப் பலனை ஒரே நேரத்தில் மொத்தமாகப் பெறலாம். ஆனால் முதிர்வின் பின்னர் நீண்ட காலத்திற்கு காப்புறுதி மருத்துவ நிதியைப் பராமரிக்க விரும்பினால், உங்கள் ஓய்வூதியத்தை இலக்காகக் கொண்டு, நீங்கள் இரண்டு செலுத்துகை வகைகளை தேர்வு செய்யலாம்.
முதலாவது உங்கள் காப்புறுதி முதிர்வின் போது முதிர்வுத் தொகையை பெறுவதற்கு பதிலாக லைஃப் லைன்(Life Line) கொடுப்பனவு அனுகூலத்தினை தெரிவு செய்வதன் மூலம் முதிர்வுத் திகதியிலிருந்து 20 வருட காலம் வரை மருத்துவ நிதியை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அவசர மருத்துவ தேவைகளுக்காக நிதியை மீளப்பெற்றுக்கொள்ளவும் முடியும்.
மற்றொன்று “மாதாந்த செலுத்துகை” முறையாகும், முதிர்வுக்குப் பின்னர் உங்கள் எதிர்கால மருத்துவச் செலவுகளுக்கு மாதாந்த சலுகையை பெற விரும்பினால், ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்திற்கு மாதாந்த கொடுப்பனவுகளை தேர்வுசெய்யலாம். இந்த நீடிக்கப்பட்ட காலத்தில் உங்கள் நிதிக்கான பங்கிலாபத்தையும் செலிங்கோ லைஃப் சேர்த்துக் கொண்டே இருக்கும், மேலும் காப்புறுதி முதிர்வின் பின்னரும் மருத்துவ நிதியின் உயர்வை நீங்கள் பார்க்கலாம்.
மேம்பட்ட பாதுகாப்பிற்கான வாழ்க்கை மற்றும் துணை நன்மைகள்
மெடிக்கல் சேவர் என்பது ஒரு மருத்துவக் காப்பீடு
எனறாலும் , இது
முதன்மையாக ஒரு ஆயுள் காப்புறுதியேய ஆகும். இதனூடாக நீங்கள் தானாகவே ஆயுள்
காப்பீட்டிற்கு தகுதி பெறுவீர்கள். காப்புறுதி காலத்தின் போது உங்களுக்கு மரணம்
சம்பவிக்குமிடத்து, உங்களால்
அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளுக்கு, ஒப்புக்கொள்ளப்பட்ட, ஒப்புக்கொள்ளப்பட்ட ஆயுள் காப்புறுதி
தொகையும், மருத்துவ
நிதியில் மீதமுள்ள தொகையும் வழங்கப்படும்.
மேலும், மெடிக்கல் சேவர் திட்டம், உங்கள்
அடிப்படை ஆயுள் காப்புறுதிக்கு, மேலதிகமாக
உங்கள் வாழ்க்கைப் பாதுகாப்பு அனுகூலங்களை அதிகரிக்க உங்கள் விருப்பப்படி
பலவிதமான துணை அனுகூலங்களை தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கிறது.
மருத்துவம்/அறுவை சிகிச்சைச் செலவுகளை மீளப் பெறுவதற்கான உலகளாவிய மற்றும் உள்நாட்டு மருத்துவமனை காப்புறுதி (ஹெல்த் சப்போர்ட் பிளஸ் அனுகூலங்கள் )
மெடிக்கல் சேவர் திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இது சர்வதேச மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை செலவுகளுக்கான தொகையை மீளப்பெறும் காப்பீட்டை வழங்கும். இது “ஹெல்த் சப்போர்ட் பிளஸ் ரைடர் பெனிஃபிட்” என்று அழைக்கப்படுகிறது.
காப்புறுதி காலத்தின் போது நீங்கள் அல்லது உங்கள் மனைவி, பிள்ளைளகள் அல்லது உங்கள் பெற்றோர்கள் நோய் அல்லது விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தால், உங்களுக்கு நிதியில் ரீதியிலான ஆதரவை வழங்கிட “ஹெல்த் சப்போர்ட் பிளஸ் ரைடர் பெனிஃபிட்” என்று உறுதி செய்கிறது. இன்னும் பல பெறுமதியான மீளப் பெற்றுக்கொள்ளக்கூடிய 14 பேக்கேஜ்களில் பொருத்தமான தொகையை நீங்கள் தேர்வு செய்யலாம்.
அவசர நிலைமையின் போது மருத்துவ நிதியில் ஒரு பங்கை மீளப் பெற்றுக்கொள்ளல்
உங்கள் காப்புறுதியானது செயற்பாட்டில் இருப்பதுடன் 2 வருடகாலம் பூர்த்தியாகிவிட்டது எனின், அக்குறிப்பிட்ட காலப்பகுதியினுள் அனைத்து கட்டுப்பணங்களும் செலுத்தப்பட்டுள்ளதாயின் உங்கள் மருத்துவ நிதியின் 20% இனை கொடுக்கப்பட்டுள்ள காப்புறுதி வருட காலத்தினுள் உங்களால் மீளப் பெற்று, உங்கள் மருத்துவ செலவுகளை பூர்த்திசெய்து கொள்ள முடியும். அவ்வாறு மீளப் பெறுகையானது வருடத்திற்கு இரண்டு முறைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆகக் குறைந்தது ரு. 25,000 மாத்திரமே மீளப் பெற முடியும்.
பாரிய நோய் ஏற்படுமிடத்து அல்லது பாரிய சத்திரசிகிச்சை ஒன்று செய்யப்படுமிடத்து, உங்கள் மருத்துவ நிதியில் 95% இனை உங்களால் மீளப் பெற்றுக் கொள்ள முடியும் .
மெடிகல் ஃபன்ட் பூஸ்டர் (Medical Fund Boosters)
நடைமுறையில் இருக்கும் ஒவ்வொரு காப்புறுதிக்கும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சரியான திகதியில் கட்டுப்பணங்களை செலுத்தி அல்லது 365 நாட்களுக்குள் புதுப்பித்து மற்றும் கடந்த 4 ஆண்டு காலத்தினுள் மீளப் பெறாமல் இருக்கும் மருத்துவ நிதிக்கு கட்டுப்பணம் மற்றும் சாதாரண ஆயுட் காப்புறுதிக்கான ஒரு வருட கட்டுப்பணம் உங்கள் மருத்துவ நிதியில் வைப்பில் வைக்கப்படும். இந்த மெடிகல் ஃபன்ட் பூஸ்டர் ஆனது உங்கள் மருத்துவ நிதியினை மேலும் வளரச் செய்திடும். அதற்கு நீங்கள் கட்டுப்பணத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதுடன் நிதியிலிருந்தும் மீளப் பெறுகைகளை செய்யாமல் பேணப்படுதல் வேண்டும்.
மருத்துவ நிதி மீள் நிரப்பல் வசதி
கட்டுப்பணம் செலுத்தும் காலத்தின் போது மருத்துவ
நிதியை நிரப்பி, நிதி
இருப்பை அதிகரிக்க முடியும்.